பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 0 நாடகத்திலோ திரைப்படத்திலோ மதுவிலக்கு வீரனாக வந்து ஊருக்கு உபதேசிப்பவன், “குடிக்கவே மாட்டான்" என்று கருதுவது.... 66 "பிற பெண்களைப் பார்ப்பதே பாபம்" என்று சினிமா வில் பேசுகிறவன், "பெண் பித்தனாக வாழ்க்கையில் இருக்கமாட்டான்" என்று கூறுவது... நல்லவனாக வேடம் போட்டவன் எல்லாம், "நல்லவன் தான்' என்று ஏமாறுவது... இப்படியல்லவா சமுதாயத்தை! ன்றையச் சினிமா, கதையை ரசிப்பது- கதாபாத்திரத்தை விமர்சிப்பது- நடிப்பைப் புகழ்வது- 23 சீரழிக்கிறது என்ற நிலைமாறி, படத்தில் நடித்தவர்களை தெய்வங்களாய்- தேவ தூதர்களாய் - புனிதர்களாய் - புண்ணிய மூர்த்தி களாய் கருதிக்கொண்டு- 'வில்லன் பாத்திரம் ஏற்ற வர்கள், உண்மையிலேயே வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார்கள். என்று எண்ணிக் கொண்டு று எண்ணிக் கொண்டு-"ஏதோ ஒரு புத்தகம் படித்தோம்" என்ற உணர்வோடு இல்லாமல், பண்பையே பாழாக்கிக் கொள்கின்ற கெடுநிலை, இன்று உருவாகியிருக்கிறது! இந்தத் தீமை குறிப்பாகத் தாய்க்குலத்தில் அதிக மாகத் தொத்திக்கொண்டுவிட்டதைக் காணுகிறோம். இந்தத் தீமை களைய, இந்திமொழியில் ஒரு திரைப் படம் வெளிவந்தது. அதனைத் தமிழாக்கம் செய்து, பீடுநடை எழுத்தாளர் நண்பர் பிரகாசம் அவர்கள், "சினிமாப் பைத்தியம்" என்ற எழுத்தோவியமாகத் தந்தார். அது நண்பர் ஏ.எல். எஸ்.அவர்களின் அரிய திரைப்படத் தயாரிப்பாக வெளி வந்து வெற்றிகரமாகத் தமிழகத்தில் நடைபெறுகிறது. கதையும் - தயாரிப்பும் - நடிப்பும் இயக்குநர் சீனிவா சனின் கைவண்ணமும், 'சினிமாப் பைத்தியத்தின் வாயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/33&oldid=1695059" இலிருந்து மீள்விக்கப்பட்டது