பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சந்திப்பு உடன்பிறப்பே, காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா சந்தித்ததையும் - இருவரும் நீண்ட நேரம் தையும், நீ, ஏடுகளில் கண்டிருப்பாய்! - என்னைச் உரையாடிய மாநிலங்கள், மத்திய அரசின் ஏவல் பதுமைகளாக இருத்தலாகாது' என்பதில் திடமான கொள்கை கொண்ட ஒருவரைச் சந்திப்பதிலும், கருத்துக்களைப் பரிமாறி கொள் வதிலும் நமது கழகத்தினருக்கு எவ் வளவு மகிழ்ச்சியும் - உற்சாகமும் இருக்குமென்று நாட்டுக்குத் தெரியும். - அதுவும், கொண்ட கொள்கைக்காக இருபதாண்டுக் காலத்திற்கு மேலாக எத்தனையோ கஷ்ட எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்ட தியாகச் செம்மல் அவர்! நட்பு - உறவு - தயவு - தாட்சண்யம் எதற்கும் தன் நெஞ்சத்தைச் சலனப்படுத்திக் கொள்ளாமல், உரிமைக்குக் குரல் கொடுத்து, இன்று வெற்றி வேங்கையாகத் தலை நிமிர்ந்து நிற்பவர்! அவரைக் காண்பதும், பேசுவதும், எனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்தது - 'காஷ்மீரத்தின் முதல் வராகப் போகின்றவரைச் சந்திக்கிறோம்' என்ற பெருமை யல்ல! 8 6 இருக்கின்ற உரிமை போதும் - இந்தப் பதவி நிலைத் தால் சரி' என்று எண்ணிடாமல், இருபதாண்டுகளுக்கு மேலாகப் போர்க்களத்துப் புலயாகவே உலவிக்கொண் டிருந்த ஒரு வீர மனிதனைச் சந்திக்கிறோம்" என்ற பெருமை தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/35&oldid=1695061" இலிருந்து மீள்விக்கப்பட்டது