பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அவர் சென்னையில் வந்து இறங்கியவுடனே, கலைஞர் 'மாநில சுயாட்சி கேட்டால் கொடுக்க வேண்டி யதுதான்' என்று செய்தியாளர் கூட்டத்தில் முழங்கியது. “வாராத மழை வந்ததுபோல்” இருந்தது. "மாநில சுயாட்சி கேட்பது பிரிவினையாகாது; இந்தியாவின் ஒற்றுமைக்கு மாநில சுயாட்சி தேவை என்பது போன்ற அவரது தெளிவான கருத்துக்களை இங்குள்ள சில ஏடுகள், மெல்லவும் முடியாத - விழுங்கவும் முடியாத நிலையில், எப்படியோ வெளியிட்டுள்ளதையும் நீ பார்த்திருப்பாய்! நாம் - வருங்கால இந்தியாவை வலிமைமிக்கதாக ஆக்கத் தேவையான மாநில சுயாட்சிக் கொள்கையை எடுத்து வைக்கும்போது, அதற்கு ஏற்படும் எதிர்ப்புக்கள் - கேலிகள் கிண்டல்கள் - விஷமப் பிரச்சாரங்கள் - மாற்றார் தாக்குதல் - பத்திரிகைகள் இருட்டடிப்பு - ஆதிக்கத்தில் இருப்போரின் மிரட்டல்கள் - இத்தனையையும் அப்துல்லாவிடம் எடுத்து விளக்கினேன் 1 அவரும், இதுபோன்ற எதிர்ப்புகளைச் தான் இன்று வெளிவந்திருக்கிறார் - என்பது உண்மையாயிற்றே! - நான், சமாளித்துத் நாடறிந்த - கொள்கைகள் வெற்றி பெற, மனஉறுதியும் - தியாக மனப்பான்மையும் தேவை” என்பதைத்தானே, ஷேக்கின் வரலாறு நமக்குக் காட்டுகிறது! 66 "பதவியிலிருந்து கீழே இறங்கு; இல்லையேல் பதவியைப் பிடுங்கிக்கொள்வோம் என்றெல்லாம் இங்குள்ள எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பும் போது - நமக்குப் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடைந்து தீரவேண்டிய இலட்சிய வெற்றிக்காக நாம் போர்க்களத்திலேதான் நிற்போம்" என்பதை மறந்து விட்டல்லவா பேசுகிறார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/36&oldid=1695062" இலிருந்து மீள்விக்கப்பட்டது