பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் இலட்சிய வெற்றிக்குப் பதவி ஒரு கருவியே தவிர பதவியே இலட்சியமாகிவிட முடியாதே! 27 நமது இலட்சியத்தின் வெற்றிக்காகப் பதவியையும் நாம் பயன்படுத்தும்போது, ஆதிக்கச் சக்திகள் அதைத் செயல்களில் ஈடுபடுமேயானால், தடுப்பகற்கு அடாத 'பதவியா - இலட்சியமா?' என்ற இரண்டு கேள்விகளில் எதற்கு நாம் தலை வணங்கப் போகிறோம்? பதவிக்க= அல்ல. அல்ல; அது இன்று போனாலும், நாளை, நமது காலடியில் வந்து விழும்! கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டுக்கூட அதனைப் பெற்றுவிட முடியும்! கொண்டிருக்கிற பச்சோந்திகள் 1 ஜெயிக்கிற பக்கம் எது?' என்று கணக்குப் போட்டுக் கொள்கையற்ற கோணங் கள் - தங்கள் துரோகத்திற்குப் பரிசாகக் கூடப் பதவிகளைப் பெற்றுவிட முடியும்; ஆனால், அந்தப் பதவிப் பெருமை காலத்தால் நிலைப்பதில்லை! இராமாயணத்தில், இலங்கையை இராமன் வீபீஷண னுக்கு வழங்கி — அவனை இலங்காதிபதி ஆக்கிய பிறகு- விபீஷணனின் ஆட்சிப் பெருமை கூறும் இலக்கியங்கள் உண்டா? [] கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்து பட்டம் பதவி யில் நிலைத்த எட்டப்பனுக்கு, வரலாறு வழங்கியுள்ள இடம் என்ன? ஒரு க ப திப்புசுல்தானின் பிணம், போர்க்களத்தில் எங்கேயோ போலத்தான் மூலையில் அனாதைப் பிணம் கண்டெடுக்கப்பட்டது; ஆனால், திப்புவின் உள்ளத் தில் தீக்கொழுந்தாக எரிந்து கொண்டிருந்த அந்தக் கொள்கை, பிணமாகிவிடவில்லையே! அவன் வீர வரலாறு, உயிரோடு தானே நாட்டில் உலவுகிறது! பாரி மன்னனைக் கொன்ற மூன்று அரசர்களின் பெயர் தெரியாது! பாரியின் பெயர் தமிழோடு இணைந்து விட்டதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/37&oldid=1695063" இலிருந்து மீள்விக்கப்பட்டது