பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தாய் வாழி காவேரி! உடன்பிறப்பே, 6 "மருங்குவண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை - அதுபோர்த்துக் கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி" கொஞ்சு தமிழ்க் குலுங்குகின்ற சிலம்பு இசைக்கின்ற கானல் வரிப்பாடலில், காவிரியின் சிறப்பை இவ்வாறு ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார் - இளங்கோவடிகள்! பல நூற்றாண்டுக்காலமாகத் தமிழகத்து வளம் பெருக்கி தமிழ் மக்களின் அன்புக்குரிய தாயாகத் திகழும் காவிரி யைத் திசை திருப்பி - அந்த அன்னையின் கருணைக்கரம் தமிழ் மக்களை அரவணைக்க இயலாமற் செய்யும் ஒரு கொடுமை யான முயற்சியை, கருநாடக அரசினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்! காட்டாறுபோல் கட்டுமீறிப் பாய்ந்துகொண்டிருந்த காவிரிக்குக் கரை எழுப்பியவர்களும், கல்லணை அமைத்துப் பாசனத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்தியவர்களும் மன்னர்களாவர். சோழ பூம்புகார்ச் சோழன் கரிகால் வளவனின் புகழ் மகுடத் தில் புதியதோர் கொற்கை முத்தாக ஒளிவிடுவதுதான் கல்லணை கட்டிய வரலாறாகும்! கருநாடகத்தில் குடகுப் பகுதியில் தோன்றிய காவிரி தமிழகத்தையே தன் புகுந்த வீடாக ஆக்கிக்கொண்டாள்! அதற்கென, அவள் பிறந்த வீடாம் கருநாடகம், பாழ் பட்டுவிட வேண்டுமென்று நாம் கூறவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/40&oldid=1695066" இலிருந்து மீள்விக்கப்பட்டது