பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 31 உலகத்துப் பல்வேறு நாடுகளிலும் நதி நீர்ப் பிரச்சினை யில், 'ஏற்கனவே பரம்பரையாக அனுபவித்து வருகின்ற பாசனப் பாத்தியதைகளைப் புறக்கணிக்கக்கூடாது' என்பது தான் அடிப்படைக் கொள்கையாக ஏற்கப்பட்டுள்ளது! அதற்கு மாறான ஒரு நடவடிக்கையில் இன்று கருநாடக அரசு ஈடுபடுவதும், அதனைப் பார்த்துக்கொண்டு மத்திய அரசு மௌனமாக இருப்பதும், வேதனை தரத்தக்க நிலை யாகும்! 1971 -ஆம் ஆண்டிலேயே தமிழகச் சட்டப் பேரவை யில் கீழ்க்கண்ட தீர்மானத்தை நாம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு நாம் அனுப்பி வைத்தோம்: அரசுகளுக்கிடையே 1892- தமிழ்நாடு-மைசூர் 1924 ஆம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் விதிகள் அனைத்தையும் மீறி, மைசூரில் ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, சொர்ணவதி அணைத் திட்டங்களையும், வேறு சில முக்கிய அணைத் திட்டங்களையும், அவைகளுக்கான திட்ட விவரங்களைப் பற்றியும் தமிழ்நாடு அரசுக்கு மைசூர் அரசு முறைப்படி முன்னதாக அறிவித்து, தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெறாமலும் - இந்திய அரசின் அனுமதியை முன் கூட்டியே பெற்றுக் கொள்ளாமலும் - இதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேரிடுவது பற்றிப் பொருட்படுத் தாமலும் - தன் போக்கில் நிறைவேற்றி வருவது குறித்து இப்பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. "காவேரி ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் உள்ள உழவர் பெருமக்களின் பாசன உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேரா பத்தைக் கருதி, 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடை யிலான நீர்த் தேக்கங்கள் தகராறுகள் சட்டத்தின் கீழ் முறையாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் ஒன்றிற்குக் காவிரி நீர்த் தகராறைத் தீர்ப்புக்கு விடுமாறு தமிழ்நாடு 1970 பிப்ரவரித் திங்களிலேயே இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தும்கூடத் தமிழ்நாட்டிற்குத் தொன்று அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/41&oldid=1695067" இலிருந்து மீள்விக்கப்பட்டது