பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கலைஞர் தொட்டு ஏற்பட்டுவந்துள்ள பரம்பரைப் பாசன உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் வகையில் இந்திய அரசு தமிழ்ந ட்டின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத இப் பிரச்சினை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அளவு கட கடந்து கால தாமதம் செய்துவருவதைக் கண்டு இம்மன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் காள்கிறது இதில் இந்திய அரசு மேலும் காலம் தாழ்த்தினால், மைசூர் அரசு தனது திட்டங்களை விரைவுபடுத்தி- அவற்றைக் கட்டிமுடிக்கும் விரும்பத்தகாத விபரீத நிலை உருவாவதற்கே அது வழிகோலுமென்றும். அதனால், பன்னெடுங்காலமாகத் தமிழ்நாடு அனுபவித்து வந்த பாசன உரிமைகள் பறிபோய்விடும் என்றும் இப்பேரவை பெரிதும் அஞ்சுகிறது 6 6 வேதனைமிக்க இத்தகைய சூழ்நிலையில், இந்திய அரசு 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான நீர்த் தகராறுகள் சட்டத்தின்கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைத்து - இத்தகராறுகளுக்குத் தொடர்புள்ள தரப்பினர் அனைவருடைய நலன்களையும் ம் கருதித் தமிழக அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளபடி காவிரி நீர்த் தகராறை இம்மன்றத்தின் தீர்ப்புக்குவிட்டு நியாயம் வழங் குமாறும், நடுவர்மன்றம் இத்தகராறு குறித்து ஆய்ந்து முடிவு செய்து தனது தீர்ப்பை அளிக்கும் வரையில் மைசூர் அரசு தன் போக்கில் திட்டங்களைத் தொடர்ந்து நிறை வேற்றக் கூடாதென அதற்குக் கட்டளையிடுமாறும் இந்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. B D இந்தத் தீர்மானத்தின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்பதைத் தமிழ்நாடு எண்ணி வருந்தியது! உச்ச நீதிமன்றத்துக்கு நமது வழக்கை எடுத்துச் சென்றோம். ஒத்தி பேசித் தீர்த்துக்கொள்ளலாம் - வழக்கை வையுங்கள்" என்று மத்திய அரசு கூறியதற்கும் இணங் கினோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/42&oldid=1695068" இலிருந்து மீள்விக்கப்பட்டது