பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 33 பேசினோம் - பேசினோம் - பலமுறை பேசினோம்; இதனை அரசு மட்டும் அணுகுகின்ற பிரச்சினையாகக் கருதாமல், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாகக் கருத வேண்டு மென்று விளக்கினோம்! தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும், இந்தப் பிரச்சினையில், ஒரே அணியில் நிற்கிறோம்! காவிரியின் பயன் அனைத்தும், எமக்கே வேண்டும்" என்று வல்லடி வழக்காடவில்லை - நாம்! *கருநாடகமும் பயன் பெறட்டும் என்பதில் கருத்து வேறுபாடும் இல்லை! ஆனால், ஏற்கனவேயுள்ள தமிழகத்தின் பழைய ஆயக் கட்டுகளைப் பாழ் நிலமாக்கிவிடக்கூடிய நிலையில் எந்த ஒப்பந்தத்திற்கும் நாம் தயாராக இல்லை! கருநாடகம், புதிதாக ஆயக்கட்டுக்களை உருவாக் குமாம்; சரி -உருவாகட்டும்; அதற்காக நாம், 'காவிரி நீரில் ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டு மாம்! 14 . அதுவும் சரி இணங்குகிறோம்; ஆனால் வளமான மழை ஆண்டுகளில் வரும் அதிகத் தண்ணீரை கருநாடகம் தான் அதிக அளவுக்கு எடுத்துக்கொள்ளுமாம்! மழையற்ற வறண்ட ஆண்டுகளில் நமக்கு இதுவரை 1924 - ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி - கிடைத்து வருகின்ற தண்ணீரின் அளவையும் குறைப்பதற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டுமாம்! ள இந்தத் தற்கொலை முயற்சிக்குத் தமிழ்நாடு முன்வர வேண்டுமாம்! தமிழ்நாட்டு மக்கள் இதற்கு இணங்கவில்லை! அவர்கள் முதற் கட்டமாக - மத்திய அரசிடம் நியாயம் கேட்கும் அறப் போராட்டத்தை அமைதியாகத் துவக்கியிருக் கிறார்கள்! நின்று தமிழகம் முழங்குகிறது! ஒரே அணியில் உரிமைக்காக முழங்குகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/43&oldid=1695069" இலிருந்து மீள்விக்கப்பட்டது