பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் ஆண்டு உடன்பிறப்பே, கழக அரசு, ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது! ஆருயிர் அண்ணன் தலைமையில், 1967ஆம் ஆண்டு மார்ச் திங்கள் இந்த அரசு உருவானபோது இதற்கான ஜாதகங்களை அரசியல் ஆருடக்காரர்களும் ஆதிக்கபுரி ஜோசியர்களும் ஆராயத் தொடங்கி, ஆறுமாத காலத்திற்குள்ளாக அற்ப ஆயுளில் ஆயுளில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் பிரகடனம் செய்தார்கள். 'நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சட்ட சபையில் காங்கிரசார் பேசிய போது, 'என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன. என அண்ணா விடையளித்தார். 'அண்ணாத்துரையிடம் போலீசார் இருக்கிறார்கள்; வடக்கே டெல்லியில் இராணுவம் இருக்கிறது; ஆகவே எச்சரிக்கை' என்று திரு. காமராசர் அவர்களைப் போன்ற வர்களே அன்றைக்குக் கழக அரசை மிரட்டினார்கள்! "தேன் நிலவு முடிந்துவிட்டது” என்று மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கூறி, மெல்ல மெல்ல சுதந்திரக் கட்சி யின் உறவை முறித்துக் கொள்ளத் தொடங்கினார்! கீழ் வெண்மணிக் கொடுமை - மாணவர் - பஸ் தொழி லாளர் போராட்டம்-மாணவர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் இவைகளையெல்லாம் திசை திருப்பிப் பிரச் சாரம் செய்து அண்ணாவின் அரசைக் கீழே சாய்த்துவிட முயன்று தோற்றார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/45&oldid=1695071" இலிருந்து மீள்விக்கப்பட்டது