பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஊதுகுழலை உதட்டில் கலைஞர் பின்னர் மிகச்சுலபமான பிரச்சாரக் கருவியான 'ஊழல்' பொருத்திக்கொண்டு, ஏடுகளில் மேடைகளில் - ஏன் - சட்டசபையில் கூட முழங்கினார்கள்! ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டுகள் - புகார்கள், அறிஞர் அண்ணாவின் விளக்கங்களுக்கு முன்னே தவிடுபொடி யாகித் தகர்ந்தன! தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் மேற்கு வங்கம், ஒரிசா, பஞ்சாப், கேரளம் போன்ற பல மாநிலங்களில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் அரசுகள் நிலயானவை களாக விளங்க வேண்டு மென்பதிலும் அண்ணா காட்டிய அக்கறை கொஞ்சமல்ல! அந்த மாநில முதலமைச்சர்களைச் சந்திக்கும் போதெல் லாம். அண்ணா அதைத்தான் கூறுவார்- "இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும், மத்திய அரசையும் ஆட்சி புரிவதற்குக் காங்கிரசுக் கட்சி ஒன்றுதான் ஏக போக உரிமை பெற்றிருக்கிறது என்று கூறப்பட்ட வாதத்தை இந்தப் பொதுத் தேர் தல் உடைத்துக் காட்டியிருக்கிறது; 'எதிர்க்கட்சி களும் ஆட்சி நடத்தலாம்' என மக்கள் தீர்ப்பு வழங்கி யிருக்கிறார்கள்; இந்தத் தீர்ப்புக்கு மதிப்பு வழங்கும் வகையில், நாம், நமது மாநிலங்களில் நிலையான ஆட்சியைத் தந்தாக வேண்டும். " அண்ணாவின் இந்தக் கருத்துக்குத் தலையசைத்து ஒப்புதல் தெரிவித்த மாநில முதல்வர்கள், எத்தனையோ காரணங்களால் தங்கள் மாநிலத்தில் நிலையான ஆட்சி தரமுடியவில்லை! அதற்கு மாறாக, 1967-ல் உருவான நமது கழக ஆட்சி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் மறைவுக்குப் பிறகும் 1971 வரையில் நிலை குலையாமல் நீடித்து அடுத்து நடந்த பொதுத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்று '138' என்றிருந்த சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை '184'என்று உயர்த்திக்கொண்டது! 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/46&oldid=1695072" இலிருந்து மீள்விக்கப்பட்டது