பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - - 37 இந்தியாவிலேயே ஓர் எதிர்க்கட்சி ஆட்சி -அதுவும் ஒரு மாநிலக் கட்சியின் ஆட்சி -நிலையாக எட்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதும், இரண்டு பொதுத் தேர் தல்களில் தொடர்ந்து மிகப்பெரும்பான்மை பெற்றிருப் பதும் தமிழகத்திலேதான் என்பதை, அரசியல் தெளிவு படைத்த உள் நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர் களும் உணர்ந்து பாராட்டத்தான் செய்கிறார்கள்! 1971ஆ ஆண்டில், காமராஜரும் இராஜாஜியும் சேர்ந்து நின்று முழு வலிவோடு நம்மை நம்மை எதிர்த்தபோது நமக்கு பெருந்தோல்வி காத்துக்கொண்டிருப்பதாகத் தான் இங்குள்ள பத்திரிகைக் கோட்டைகள் செய்தி முரசு கொட்டின! - நமது வெளி மாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கும் மாநிலத்தில் பத்திரிகை நிருபர்களாகப் பணிபுரியும் நண்பர்கள், அவர்களுக்குத் தொடர்புடைய வெளிப்புறத்து ஏடுகளுக்குத் தந்த செய்தி விளக்கங்களில், கழகம் கடுகினும் சிறிதாக இளைத்து விட்டது' என்றே எழுதி அனுப்பினர்! ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் ஏடு அதனை மெய்யெனக் கண்டு வெளியிட்டு நடத்துவோர் பின்னர் ஏமாந்தனர்! நன்றிப் பெருக்குடனும் - நட்புறவுடனும்- கொள்கைத் தெளிவுடனும் தோழமைக் கசிகளாக விளங்கும் SO தி. மு.க., முஸ்லீம் லீக், தமிழரசுக் கழகம், பார்வர்டு பிளாக், தோழமை அணிக்கு, மக்கள், தங்கள் ஆதரவை அள்ளி வழங்கினர்! என்று அண்ணனால் இரட்டைக் குழல் துப்பாக்கி' வர்ணிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் துணையும் நம் பக்கம் இன்று போல் அன்றும் இருந்தது! எத்தகைய சாதனைகள் புரிய ஆட்சியில் அமர வேண்டுமென்று அண்ணா அறிவித்தாரோ அவைகளைத் திறம்படச் செய்து முடித்திருக்கிறோம்! அ க 5-3 -t -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/47&oldid=1695073" இலிருந்து மீள்விக்கப்பட்டது