பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இயற்கையின் சீற்றம் தமிழகத்தை மூன்றுமுறைகள் அவதிக்கு உள்ளாக்கியபோதும் 1 கலைஞர் இரண்டு உலகெங் ய கும் எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினை இந்தியாவைப் ரும் அளவுக்குப் பாதித்து அதற்குத் தீர்வுகாண ந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளாமல் - அதன் விளைவுகளுக்கும் தாக்குப் பிடித்துத் தமிழக ஆட்சியை நடத்தி வருகிறோம்! கழுத்தறுப்போர் - காட்டிக் கொடுப்போர்- நயவஞ்ச கர் - இவர்களின் துரோகச் சேட்டைகளால் கழக அரசு கவிழ்ந்து விடுமென்று அதற்கான நாட்களை விரல்விட்டு எண்ணிக் கொண்டிருந்தவர்கள், எல்லாம் அந்த விரலை மூக்கிலே வைத்துக் கொண்டு வியப்புறும் வண்ணம், தொடர்ந்து நடந்து கழக அரசு எட்டப்பர் களைவென்று - எட்டாம் ஆண்டைக் கடந்திருக்கிறது! இந்த எட்டு ஆண்டுகளில்தான், சென்னை ராஜ்யம் 'தமிழ் நாடு' என மணக்கும் பெயர் பெற்றது! சுயமரியாதைத் திருமணம் சட்டச் சம்மதம் பெற்றது! இந்தி மொழி ஆதிக்கம் - அகற்றப்பட்டது! விதிவிலக்குகள் நீக்கப்பட்டு - நில உச்ச வரம்பு, '15 ஸ்டாண்டர்டு ஏக்கர்' என ஆயிற்று! பேருந்துகள்-தேசியமயத் திட்டம்! புகுமுக வகுப்பு வரையில் இலவசக் கல்வி! தாழ்த்தப்பட்டோருக்கு இலவச வீட்டு வசதி! குடிசை மாற்று வாரியம் ! குடிநீர் வடிகால் வாரியம்! அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்! திட்டம்! இலட்சக்கணக்கான பொது மக்களும் இணைந்திடும் சமூகப் பாதுகாப்புத் ஏழை எளியோருக்கு வீட்டு மனை, விவசாய நிலப் பட்டாக்கள்! எங்கும் மின்னொளி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/48&oldid=1695074" இலிருந்து மீள்விக்கப்பட்டது