பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் ஏழைக்குக் கண்ணொளி! தொழுநோய் இரவலர்க்கு மறுவாழ்வு! ஊனமுற்றோருக்குப் புதுவாழ்வு! 39 கை ரிக்ஷா ஒழிப்பு - இலவச சைக்கிள் ரிக்ஷா அன்பளிப்பு! விவசாயத் தொழிலாளருக்குக் குடியிருப்பு மனைச் சட்டம்! பூம்புகார்! கட்டபொம்மன் கோட்டை! வள்ளுவர் கோட்டம்! என்அன்பு உடன்பிறப்பே! எழுதத்தான் நேரமுமில்லை- இடமும் இல்லை! அவ்வளவு காரியங்கள்! இனியும், தேவையான திட்டங்களைத் தயக்கமின்றித் தீட்டி நிறைவேற்றத்தான், அண்ணன் நமக்குக் கோடிட்டுக் காட்டிய மாநில சுயாட்சியைப் பெற உரிமைக்குரல் கொடுக்கிறோம்! ஒன்பதாம் ஆண்டில் அந்த உறுதியுடன் தான் கழக ஆட்சி அடியெடுத்து வைக்கிறது! "நமது உரிமைக்குரல் வெற்றி பெற எந்த வகைத் தியாகத்துக்கும் தயாராக இருப்போம்" என்ற துணிவுட னும் தெளிவுடனும் - அண்ணன் பாதம் தொட்டு வணங்கி நம் பயணத்தைத் தொடருவோம்! அன்புள்ள, மு.க. . 3-3-75 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/49&oldid=1695075" இலிருந்து மீள்விக்கப்பட்டது