பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன் துளிகள்! உடன்பிறப்பே, எதிலும் குறை காண முடியாதவர்கள் சொல்லப் போனால், தனியாக நாலு பேரோடு உட்கார்ந்து பேசும் போது நம்மை மனதாரப் பாராட்டுகிறவர்கள், ஏதாவது ஒன்றைச் சொல்லி தங்கள் கட்சிக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற சிறிய- மிகக் குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு நமது கழக ஆட்சியைத் தாக்குவதற்குக் கூர்மழுங்கிக் கிடக்கும் ஆயுதங்களைக் கையில் தூக்கிக்கொண்டு சுழற்றிய வண்ணம் இருப்பதை நீயும் - நானும் நன்றாக உணருகிறோம்; நாடும். அதனைப் பெரும் அளவுக்குப் புரிந்துகொண்டுதான் இருக்கிறது! இந்தியத் திருநாட்டின் பல்வேறு மாநிலங்களில், இந்திரா காங்கிரசின் கொற்றக்குடை நிழல் விழுந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாவின் அடிச்சுவட்டில் --இலட்சியப்பயணம் நடத்தும் ஒரு மாநிலக்கட்சியின் ஆட்சி நிலைத்து நீடித்திருப்பது, சாம்ராஜ்யங்கள் பலவற்றின் புதைகுழியாக விளங்கும் டெல்லிப்பட்டினத்துக்குப் பொறுக்கவில்லை; அதனால்தான், அங்குள்ள ஆதிக்க நெஞ்சங்கள் சிலவற்றில் சிலவற்றில் எரிமலைக் குழம்பு வெளிப்படுகிறது! எந்த மாநிலத்திலிருந்து யார் சென்று டெல்லியிலே மந்திரி மகுடம்' சூட்டிக் கொண்டாலும், உடனடியாக அவர்களின் பேச்சும் போக்கும் மாறிவிடும் என்று பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/50&oldid=1695076" இலிருந்து மீள்விக்கப்பட்டது