பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 41 சொல்லக் கேட்டிருக்கிறேன்; சில உதாரணங்களையும் அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன். என்பதற்கும் ஒன்றி 'எல்லோருமே அப்படியல்ல' ரண்டு எடுத்துக் காட்டுக்கள் மத்திய அமைச்சரவையிலே உண்டு என்பதையும் நான் கூறித்தான் ஆகவேண்டும். ஆனால், தமிழகத்திலிருந்து நமது பேராதரவைப் பெற்று டெல்லி சென்று அமைச்சர்களான இருவரைப் பற்றி எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை! மறைந்த மோகன்குமாரமங்கலத்தைப் பற்றி நான் இப்போது விமா சிப்பது நாகரிகமுமாகாது -- நமது பண்பும் அல்ல! களா?" - கேட்டீர் கிருஷ்ணகிரியில் நின்றவரை இமயகிரியில் ஏற்றிவைத்து விட்டு, "நான் அப்போதே சொன்னேனே- என்று அனந்தநாயகி போன்றவர்கள் இன்று சுட்டிக்காட்டி நம்மைக் கேலி பேசுகின்ற நிலையைத் தாங்கிக்கொள்ளவும் ஆளாகி விட்டோம்! - ஆம்; நமது சுப்ரமணியம் அவர்கள் -('நமது' என்று உரிமையோடும், உணர்வோடும்தான் சொல்ல வருகிறது) மத்திய அரசில் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தி கேட்டதும் மகிழ்ந்தோம் - வாழ்த்தினோம்! தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தையே அவர்தான் வந்து தொடங்கி வைத்திடவேண்டுமென்று விரும்பினோம்! மாநிலத்துக்குப் பல மேம்பாடுகளை வார்!' என்று எதிர்பார்த்தோம்! 6 8 6 உருவாக்கு “தொடங்கப்பட்டு-தொடராமல் முடங்கிக்கிடக்கும் சேலம் இரும்புத் தொழிற்சாலை எழுந்து நடமாடும் என்றும், நெய்வேலியில் இரண்டாவது சுரங்க வேலைகள் ஆரம்பமாகும் என்றும் குமரி மாவட்ட புகை வண்டிப் பாதையின் பணிகள் - விழா அளவோடு நின்று விடாமல் லேகமாக நடைபெறும்" என்றும், "சேது சமுத்திரத் திட்டம்கூட வந்துவிடும் என்றும் நம்பிக்கிடந்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/51&oldid=1695077" இலிருந்து மீள்விக்கப்பட்டது