பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் உடன் பிறப்பே! அண்ணன் தந்த துணிவு -தெளிவு வைகளுடன், உன் போன்றோர் தாண்டுள்ளத்தை நம்பி, வறட்சி நிவாரணநிதி' வேண்டுகோளை துள்ளேன். விடுத் வேண்டுகோள் வெளிவந்த உடனேயே, சென்னையைச் சேர்ந்த இராஜலட்சுமி என்ற சகோதரி, என ‘தமிழனின் தன்மானமே பெரிதென்ற தங்களின் அறிவிப்புக்குத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.' மடலும் எழுதி, ஐந்து ரூபாய்க்கான காசோலை யையும் அனுப்பியுள்ளது கண்டு அகமகிழ்ந்தேன்! ஓந்த ஐந்து ரூபாய் எனக்கு ஐந்துகோடி ரூபாய் எனத் தெரிகிறது! அவ்வளவு ஆழமான உணர்வு அதில் அங்கி யிருக்கிறது! முதல் நாளே வறட்சி நிவாரண நிதி இரூபதாயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது! உடன் பிறப்பே! நீயும் உன்னால் இயன்ற தொகையை நேரடிய க அனுப்பு! அரசின் சார்பில் நிதித் துறையினர் அந்த நிதியை நிர்வகிக்கின்றனர்! நீயும் அனுப்பு -மற்றவர்களையும் அனுப்பச் சொல்! யாரும் தனிப்பட்ட முறையிலோ- அமைப்பு வாயி லாகவோ - கழகத் தோழர்கள் வசூல் செய்திட முனைய வேண்டாம்! களங்கம் கற்பித்திடச் சிலர் தயாராக இருப் பார்கள்! ஐந்து ரூபாய்-பத்து ரூபாய் என்று அனுப்பினால் கூட அவைகள் கோடிகளாகும்! சிறு துளிதானே பெரு வள்ளம்! அதிலும், என் உடன்பிறப்பு அனுப்புவது - எனக்குத் தேன்துளியல்லவா? அன்புள்ள, மு.க. 22-3-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/54&oldid=1695080" இலிருந்து மீள்விக்கப்பட்டது