பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 46 கலைஞர் "தொழிற் சங்கச் சட்டங்களுக்கு உட்பட்டது அல்ல - அந்த மருத்துவ மனை" என்பதை, முதலில் 'கல்கி'யார் புரிந்து கொள்வது நல்லது! " அடுத்தது, பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழைகளுக் காகவே. தாடங்கப்பட்ட அந்த மருத்துவமனை, இப்போது வசதியுள்ளவர்களுக்காகவே பயன்பட்டு அதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடி ரூபாய் வருமானம் உள்ளதாக மாறியிருக்கிறது என் பதையும் 'கல்கி' யார் உணர்ந்துகொள்ள வேண்டும்! எனக்கும் அந்த மருத்துவமனைக்கும் எந்தத் தகராறும் இல்லை; அங்குள்ள பல்வேறு கட்சிகளைச் ச ர்ந்த தொழிலாளர் அடங்கிய யூனியனுக்கும் - நிர்வாகத்துக்கும் தகராறு ; ஐந்து பேர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் வேலை நிறுத்தம்; வேலை நிறுத்தம் செய்த வர்களில் பதினைந்து பேர் வேலை நீக்கம்; இரு சாராரும் என் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்; முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐந்து பேர் விவகாரத்தில் நான் தலையிட மறுத்துவிட்டேன்; 'வேலை நிறுத்தம் என்று காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட செய்யப்பட்ட பதினைந்து தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டு- சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்' நிரவாகத்தைக் கேட்டுக்கொண்டேன்; நிர்வாகம் மறுத்து பிறகு, அந்தத்தொழிலாளிகளுக்கு அரசாங்கம் விட்டது. மாற்று யுள்ளது! வேலை கொடுத்து- அமைதியை ஏற்படுத்தி 'தவறு செய்தவர்களை மன்னிக்கவேண்டாமா? ஏசு சொன்னாரே' என்று வாசாலகமாகப் பேசுகிறீர்கள்; தவறு- செய்தவர்கள் மனம் திருந்தி வருந்தினால்தான், மன்னிக்கச் சொன்னார் ஏசு!" என்று 'கல்கி' எனக்கு எழுதிய மடலில் குறிப்பிட் டிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/56&oldid=1695082" இலிருந்து மீள்விக்கப்பட்டது