பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலைஞர் முடிவை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட பண்பாளர் கண்ணபிரான். அவரது மருமகன் நண்பர் வேழவேந்தன் அமைச் சரான போது கண்ணபிரான் துள்ளிக் குதிக்கவில்லை. அவர் அமைச்சர் பதவியில் இல்லாததற்காகவும் துயரப் படவில்லை. கழகம்! கழகம்!! அது ஒன்றே அவரது உயிர் மூச்சோடு சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. இரண்டு வைரம் பாய்ந்த தூண்கள் சாய்ந்து விட்டன. கழகம், தங்களுக்குப் பதவி வழங்கினாலும் வழங்கா விட்டாலும், கவலைப் படாமல் - தாங்கள் வளர்த்த கழகம் தங்கள் மீ து நடவடிக்கை எடுத்தாலும் அதற்குத் தலைவணங்கிக் கட்டுப்பட்டு -நம்முடன் காழ்ப்பு, கசப்பு இன்றிப் பழகிய இரண்டு செயல்வீரர்களை இழந்து விட்டோம். கண்கள் குளமாகின்றன. ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வது தவிர வேறு வழி என்ன இருக்கிறது? அன்புள்ள, மு.க. 3-4 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/62&oldid=1695089" இலிருந்து மீள்விக்கப்பட்டது