பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலைஞர் வழிகாணுங்கள்' என்று தலைமைக் கழகம் அறிவுரை கூறவில்லை! 6 6 சட்டசபையைக் கூட்டிப் பலப்பரிட்சை பார்க்காமலே கூட-விரைவில் வரவிருக்கும் தேர்தலிலே ஈடுபடலா மெனினும் கூட, ஜனநாயகத்தை மதித்து உடனடியாக இராஜினாமா செய்துவிடுவதே நலம்" என்று நண்பர் பரூக் அவர்கட்கும் - கழக உறுப்பினர்கட்கும் தலைமைக் கழகம் அறிவுரை கூறியது! அதனை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகப் பரூக் மந்திரிசபை பதவி விலகியது! அந்த இடை நேரத்தில், புதுவையில் உள்ள நடிகர் கட்சியினர்-வலது கம்யூனிஸ்டுகள், அங்குள்ள கவர்னரைச் சந்தித்து, பரூக் மந்திரிசபை உடனடியாகப் பதவி விலகு வதுதான் ஜனநாயகமாகும் என் று அறிவித்தனர்- - அறிக்கைவிட்டனர்! 9 தமிழ்நாட்டிலுள்ள வலது கம்யூனிஸ்டுத் தலைவர்களும் 'புதுவை தி.மு.க. அரசின் பலம் - இரண்டுபேர் விலகி யதால் குறைந்துவிட்டது; உடனே சட்டசபையைக் கலைக்க வேண்டும்" என்று போர் முரசு கொட்டினர்! அதற்குள்ளாகவே புதுவையில் கழக அரசு பதவி விலகி ஜனநாயக உறவுக்கு எடுத்துக்காட்டாக எழுந்து நின்றது! ஒருநாள் இடைவெளியில், வலது கம்யூனிஸ்டு நண்பர் களும் - நடிகர் கட்சித் தோழர்களும் அவ்வளவு வேகமாகக் கூப்பாடு போட்டார்களே - அவர்கள் எல்லாம், கேரள மாநிலத்து நிலவரம் பற்றி வாயைத் திறக்கவில்லை- பார்த்தாயா? பெரும் கேரளத்தில் ஆளுகின்ற கூட்டணிக்கட்சி, பான்மை இழந்துவிட்டது; மொத்த உறுப்பினர்கள் 131 பேர்; நேற்றுவரையில் ஆளுங் கூட்டணியின் பலம் 64 என்ற எண்ணிக்கைதான்! 6 ர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/64&oldid=1695091" இலிருந்து மீள்விக்கப்பட்டது