பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் இப்படிப் 55 பல நாட்களாக 'கோமா' நிலைமையில் கேரள ஜனநாயகம் மரணப்படுக்கையில் கிடக்கிறது! நேற்று திடீரென்று வருவாய்த்துறை அமைச்சர் பேபி ஜான் - உள்துறை அமைச்சர் கருணாகரன் - தொழிலாளர் ன். அமைச்சர் புருஷோத்தமன் ஆகிய மூன்று அமைச்சர்களும், தங்கள் சீரிய தலைமையின்கீழ் மூன்று எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுவந்து சபாநாயகரிடம் நிறுத்தி, அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஆளும் கட்சியை ஆதரிப்பதாகக் கூறினர். அந்த மூன்று உறுப்பினர்களில் ஒருவர் சுயேச்சை! இருவர் - கேரளக் காங்கிரசை சேர்ந்தவர்கள்! நல்ல அதிர்ஷ்டசாலிகள்! கெட்டிக்காரர்கள்! வாழ்க- கேரள ஜனநாயகம்! 64 என்ற நிலைமாறி - 67 பேர் என்ற அளவுக்குக் கேரளக் கம்யூனிஸ்டு முதல்வர் பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்! இடையில் எத்தனையோ நாட்கள் உருண்டோடி - விட்டன - யாரும் வாய்திறக்கவில்லை - ஜன நாயகம் பற்றி! புதுவையில் தான் ஜனநாயகம் சாகும் கேரளத்தில் சாகுமா, என்ன? அத்துடன் முடிந்ததா? - உடன் பிறப்பே! 'தினை விதைத்தவன் தினை தானே அறுக்கவேண்டும்' என்பது பழமொழி; 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதானே முதுமொழி! இதோ, ஒரு கேரளத்துச் செய்தி - படித்துப் பார்:- கேரள சபாநாயகர், சட்டசபையைக் கால வரம்பின்றி ஒத்திவைத்தார்; அவர், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாகவும் அறிவித் தார். .. கேரளத்தை ஆளுகின்ற ஐக்கிய முன்ன ணியின் இணக்கக் குழு முதலமைச்சர் அச்சுத மேனன் வீட்டில் கூடியது; சபாநாயகர், எதிர்க் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/65&oldid=1695092" இலிருந்து மீள்விக்கப்பட்டது