பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் . . 59 ஒலி காமராசர் மேடையில் உட்கார்ந்திருக்கிறார். பெருக்கியில் பேசுகிறார். ஒளி விளக்குகள் எதிரே காணப் படுகின்றன. எல்லாம் மின்சாரத்தால் இயங்குபவைதான்! அதுவும் காமராசர் கூட்டங்களுக்காகத் தனி விண்ணப் பங்கள் போடப்பட்டு சிறப்பாக வழங்கப்பட்ட மின்சாரம்! வறட்சியால் ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறை குறித்து அரசாங்கத்தை ஒரு சாடு சாடுகிறார் காமராசர்! அதற்கு அந்த ஏட்டில் பெரியதோர் விளம்பரம். காமராசர் ஆட்சிக் காலத்தில், காங்கிரசார் ஆட்சிக் காலத்தில் மின்சார வெட்டே வந்ததில்லையா? இப்போதும் இந்தியாவில் சில மாநிலங்களில் மின் வெட்டு இல்லையா? கரிகாலனுக்கு விழா இளங்கோவுக்குச் சிறப்பு கட்டபொம்மனுக்கு கோட்டை வள்ளுவருக்குக் கோட்டம் காரைக்குடியில் தமிழ்த்தாய் விழா இவைகளையெல்லாம் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழினத்தின் சிறப்பை மங்காமல் மறையாமல் காப்பாற்றுகிற எதனையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. அந்தப் பொறாமைக் கனலைத்தான் எழுத்துக் களாக வடித்தெடுத்து ஏடாக வெளியிட்டிருக்கிறார்கள். உடன்பிறப்பே, அந்த ஏட்டின் கடைசிப் பக்கத்தில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது. அதில் சில வரிகள்... "வறுமையில்லாமல் நீந்தி வளமான 'கோப்பை' ஏந்தி பெறுவது ஆத்ம சாந்தி' ஜீவாத்மாவின் ஆசையைக் கவிஞர் அப்படி எடுத்துக் காட்டுகிறார். ஆனால், அந்தப் பத்திரிகையாளருக்கோ, கண்ணகிக் காப்பியத்தை சிறப்பிக்கும் விழாவை நாம் எடுப்பதைத் தாக்குவதிலும், தமிழுணர்வு கொண்டு பணி யுரியும் அரசு வீழ வேண்டுமென்பதிலும் தான் ‘ஆத்ம ம சாந்தி!" 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/69&oldid=1695096" இலிருந்து மீள்விக்கப்பட்டது