பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுத்திருப்போம்! உடன்பிறப்பே! செயல்வீரர்கள் கோவை - சேலம் - நெல்லை - திருச்சி மாவட்டங்களில் கூட்டங்களிலும், பொதுக் கூட்டங் களிலும் உன் ஆற்றலைக் கண்டு நானும் - பொதுச் செயலாளர் நாவலரும் - பொருளாளர் பேராசிரியரும் வியந்து பாராட்டி, மகிழ்ந்து வாழ்த்தியதை மறந்திருக்க மாட்டாய்! எழுச்சித் திருக்கோலம் கொண்டிருந்த உன்னை நினைத்திடும்போது, துன்பங்கள் எல்லாம் தொலைவில் ஓடுகின்றன! எதிர்ப்புக் கணைகள் முனை முறிந்து நொறுங்கிச் சிதறும் வண்ணம். மாவட்ட அளவில் நீ ஆங்காங்கு திட்டம் வகுத்து - ஒன்றியங்களின் அளவில் உறுதுணையாக நின்று, கிளை அமைப்புக்களின் அளவில் செயல்படும் திறனை - உன் ன ழைக்கும் பண்பை - எப்படித்தான் போற்றுவது - என எனக்குப் புரியவில்லை! - உனக்கிருக்கும் தொல்லைகள் ஒன்றா இரண்டா? ஓராயிரம் அல்லல்களுக்கிடையே நீ அலைந்து திரிந்து- அண்ணன் உருவாக்கிய கழகத்தைக் காத்திடும் தொண்டினை ஆற்றிக் கொண்டிருக்கிறாய்! அதை எண்ணும்போது. எனக்கு இருக்கும் ஓயாப் பணிகளைக்கூட அயராது நிறைவேற்றுகின்ற தெம்பினைப் பெறுகிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/71&oldid=1695098" இலிருந்து மீள்விக்கப்பட்டது