பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 என் களைப்புப் போக்கும் மாமருந்தாக உழைப்பின் வெற்றிகள் அமைந்து வருகின்றன! கலைஞர் உன் ஆக்கப் பணிகள் குறித்து நீ, செயல் வீரர்கள் கூட்டத்தில் வழங்கிய கருத்துக்களை எண்ணி நாங்கள் மூவரும் மகிழ்வதா? இலட்சக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே எழுந்து நின்று, ன்று, நீ எங்களை நோக்கி, இலட்சிய வெற்றி ற்றே தீருவோம்' என்று சிங்கக் குர ல் எழுப்பினாயே - அதனை நினைத்து நாங்கள் மகிழ்வதா? நாம் என்ன செய்தோம் என்று விடை கண்டு - மேலும் கட்சி வளர் 6 "கட்சிக்காக கேட்டு - அதற்கு உழைப்பவரே கட்சியின் கண்மணிகளாக முடியும்! 'கட்சி நமக்கு என்ன செய்தது?" என்று கேட்டுச் சோர்வு மேலிட உட்கார்ந்திருப்பவர்கள், கட்சியின் உயிர் நாடிகளாக என்றைக்கும் இருக்க முடியாது!" உழைப்பதற்கு நமக்கு அதிகார பூர்வமாகக் கிடைக் கின்ற வாய்ப்புகளை நாம் கௌரவப் பதவிகளாகக் கருதாமல்,தமிழ் பணியாற்ற மக்களுக்குப் நம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்கள்' என்ே எண்ணிச் செயல்பட்டு வருகிறோம்! . இந்த எண்ணங்களில் எப்போதாவது 'சுருதி' பேதம் ஏற்பட்டால் அதனைச் சுட்டிக்காட்ட மக்கள் மன்றம் தயாராக இருக்கிறது; ஏன்-முதலில நமது மனச் சாட்சிக்கே நாம் பதில் சொல்லியாகவேண்டும்! துபோன்ற சிந்தனைகளையெல்லாம் வடித்தெடுத்துக் கழகப் பணிகளை வகைப்படுத்துவதற்குச் செயல் வீரர் களின் கூட்டங்களில் நீ கூறிய சீரிய யோசனைகள் ஆயிரங் காலத்துப் பயிராம் தி.மு. கழகத்திற்கு உரம் ஏற்றும் யோசனைகளாகும்! சிலிர்த்திட- நெல்லை கோவை குலுங்கிட - சேலம் நெகிழ்ந்திட - திருச்சி அதிர்ந்திட கழகப் பேரணிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/72&oldid=1695099" இலிருந்து மீள்விக்கப்பட்டது