பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 63 நடத்திக் காட்டிய என் அன்பு உடன்பிறப்பே! உன்னைச் சிலபேர், அண்மைக் காலமாகக் குறைத்து மதிப்பிட்டு, எழுதியும் பேசியும், தமக்குள் களிபேருவகையுடன் உரை யாடல் நிகழ்த்தியும் வருகின்றனர்! அதனை, நீயும் அறிவாய் - நானும் அறிவேன்! நீ, நீறுபூத்த நெருப்பு என்பதை, நான்கு மாவட்டங் களில் நடத்திக் காட்டிய உணர்ச்சிமிகு நிகழ்ச்சிகளைக் கண்டபிறகு புரிந்துகொண்ட. அவர்தம் நெஞ்சங்கள், குமுறி அழும் என்பதில் ஐயமில்லை ! $ 6 ஆம் - Descoo அப்படித்தான் என்பதைப் போல, அவர்தம் மேடைகளில் நாராச நடைப் பேச்சுக்கள்- வன்முறையைத் தூண்டும் வார்த்தைகள் ஆத்திர மூட்டும் சொற்கள் - அமைதியைக் குலைக்கும் போக்குகள் எல்லை கடந்து காணப்படுகின்றன! அவர் தம் ஏடுகளும் அவ்வாறே! - "மலையே தலையை மோதவரினும், நிலைகுலையாத நெஞ்சுறுதி பெற்றவர்கள் கழகத்தினர்' என்பதை உலகுக்கு உணர்த்த - அண்ணாவின் அறவழியில் - அன்பு வழியில் எதையும் தாங்கும் இதயம் பெற்றவர் நாம் என்பதை எடுத்துக்காட்ட - கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப் பணிகளில் கவனத்தைச் செலுத்திடு! - நாளை. வட ஆற்காட்டிலும் செங்கற்பட்டிலும் நாங்கள் உன்னைச் சந்திக்க இருக்கிறோம்; ஏதோ நடக்கு மென்று 'பரபரப்பு'க் காட்டப்படுகிறது! ஏதேதோ நடந்தபோதெல்லாம், நாம் அழிந்துவிட வில்லை! நமது தமிழ் உணர்ச்சி குன்றிவிடவில்லை! உரிமைக் குரல் ஓய்ந்துவிடவில்லை! எது நடந்திட்டாலும், எத்தகைய எதிர்ப்பு நம்மை மோதிட்டாலும் - அண்ணனை நெஞ்சில் பதியவைத்துக் காண்டிருக்கும் நாம், அமைதி வழி நிற்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/73&oldid=1695100" இலிருந்து மீள்விக்கப்பட்டது