பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவாம்! உடன்பிறப்பே, “இந்திரன், அகல்யா என்னும் ரிஷிபத்தினியைக் கற்பழித்தவன் அதனால்தான் இந்திரன்மீது கருணா நிதிக்கு ஒரு ஆசை. ஆகவேதான் அவர் பூம்புகாரில் இந்திர விழா நடத்துகிறார்." 9 இப்படி ஒரு தரக்குறைவான கருத்தை யாரோ நரகல் நடையழகர்கள், நடுங்கா நாக்கழகர்கள் நடுவீதியிலே நின்று பேசியிருக்கக்கூடும் என்று தானே நீ எண்ணுகிறாய்! இந்த அரிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டவர் அப்படிப்பட்ட அற்ப சொற்பமானவர் அல்ல. தமிழ்நாட்டில் எல்லா அமைச்சரவைகளிலும் இடம் பெற்றிருந்தவர். இரண்டு மூன்று ஆண்டுக் காலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர். தமிழ்நாட்டில் உள்ள மூத்த தலைவர்களின் வரிசையிலே வைத்து மதிக்கத்தக்கவர். இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டு தியாகம் செய்தவர். சேக்கிழார் பரம்பரையிலே வந்தவர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியவர். முதிர்ந்தவர். கூடியவர். வயது நேரில் கண்டால் வாஞ்சையுடன் பழகக் அவர் வாயிலேதான் இத்தகைய வார்த்தைகள் நர்த் தனமாடியிருக்கின்றன. அவர் எவ்வளவோ அரசியல் விமர்சனங்களைச் செய்கிறார். ஆத்திரத்தோடு பேசுகிறார். கடுமையான கண்டனங்களைப் பொழிகிறார். அந்த வாதங்கள் சரியோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/75&oldid=1695102" இலிருந்து மீள்விக்கப்பட்டது