பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 67 மதக் கடவுளோ, அல்லது பெரியவர் பக்தவத்சலத்தைப் போன்ற ஒழுக்கமும். நேர்மையும் உள்ள கடவுளோ யாராவது இருக்கிறார்களா என்று கண்டுபிடித்து அந்தக் கடவுள் பெயரால் விழா நடத்தலாமா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். எந்தக் கடவுளும் எனக்குக் கிடைக்கவில்லை. பரமசிவனுக்காக விழா எடுக்கலாமா என்றால்; உடனே பக்தவத்சலம் சீறுவார் - 'பரமசிவன் தாருகா வனத்து முனிவர்களின் மனைவி சுளையெல்லாம் கெடுத்த வராயிற்றே! என்று! தொலையட்டும். நானிலத்தைப் படைத்ததாகச் சொல்லப்படும் நான்முகன் பிரம்மாவுக்கு விழா எடுக் கலாமா என்றால்; அடபோதும் பக்தவத்சலனார் குறுக்கிட்டு கோபிப்பார். "பிர்மா தன்னுடைய மகள் திலோத் தமையையே கற்பழிக்க முனைந்தவரல்லவா? என்று! 6 . விநாயகருக்கு விழா எடுக்கலாம் என்றால், அவர் தாயைப் போல் பெண் கேட்டவர் என்று பெரியவர் பக்த வத்சலம் கிண்டல் செய்வார். போகட்டும், பக்தவத்சலத்துக்கே விழா எடுக்கலாம் என்றால், பக்தவத்சலன் பக்கத்து வீட்டுக்காரன் மனைவி ராதையிடமே உடல் தொடர்பும், உள்ளத் தொடர்பும் கொண்டவன்! கிருஷ்ணனைத் தான் குறிப்பிடுகின்றேன்! அந்தப் பரந்தாமனுக்கு பக்தவத்சலம் என்று ஒரு திருநாம் மும் உண்டே! வறட்சி நேரத்திலே பூம்புகார் விழாவா?" - என்று ஒரே வரியில் பக்தவச்சலம் கேட்டிருப்பாரே யானால், அது அரசியல் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி என்று விட்டுவிடலாம். இந்திரனை விட வேகமாக இவர், அகல்யாவை இழுத்து ஆபாசமான வியாக்கியானம் செய்திருப்பது தான் வேதனை தரத்தக்கதாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/77&oldid=1695104" இலிருந்து மீள்விக்கப்பட்டது