பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"திட்டங்கள், திரைமறைவில் !” உடன்பிறப்பே, மான் குட்டிகளையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு ஓநாய் ஒன்று அகிம்சையைப் பற்றி உபதேசம் செய்யப்போகிறதாம்! பசுவின் கன்றுகளை அடித்து விழுங்கிய ரத்தம் சொட்டும் நாக்கோடு வேங்கையொன்று வேதாந்தம் பேசப்போகிறதாம்! கழுகு, கருணை மழை பொழிகிறதாம்! வல்லூறு வாஞ்சைகீதம் பாடுகிறதாம்! ந்த அதிசயங்கள் எல்லாம் எந்தக் காட்டில் நடை பெறப் போகின்றன என்றுதானே கேட்கிறாய்! காட்டில் அல்ல; நாட்டில்தான்! இந்த வேடிக்கை நிகழ்கிறது! அவரது நடிகர் கட்சித் தலைவர் பெங்களூரிலிருந்து அறிக்கை. விடுத்திருக்கிறார். அவர் விடுத்த அறிக்கை, கட்சிப் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளிவந் துள்ளது. அவர் பெங்களூரில் "அவுட்டோர்காட்சிகளில் இரவு பகல் ஓய்வின்றி நடித்து வருகிறார் என்ற செய்தி, அதே பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் படங்களுடன் வெளியிடப் பட்டிருக்கிறது. என்ன இருந்தாலும் அந்தப் "பத்திரிகைத் தம்பி", தான், ஏற்றுக்கொண்ட புதிய தலைவரை இப்படிக்கேலி செய் திருக்கக்கூடாது! -5-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/79&oldid=1695106" இலிருந்து மீள்விக்கப்பட்டது