பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலைஞர் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்று அண்ணா திருச்சி மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தினாராம் - அது போல கருணாநிதியை எதிர்த்து கறுப்புக் கொடி போராட்டமா? அல்லது நாடு தழுவிய போராட்டமா? என்று பெரிய மாநாடு ஒன்று கூட்டி, அதிலே வாக் கெடுப்பு நடத்தி அபிப்ராயம் அபிப்ராயம் கேட்கப் போகிறாராம்? புதிய அறிக்கையில் நடிகர்கட்சியின் தலைவர் அப்படித்தான் முத்தாய்ப்பு வைத்திருக்கிறார். . அந்தோ! பரிதாபம்!! இந்த ஜனநாயகத் தெளிவு, கண்ணப்பர் திடலில் பேசுவதற்கு முன்பே ஏற்பட்டிருக் கலாமே! கண்ணப்பர் திடலில் என்ன அறிவிப்பு செய்தார்? $ 6 'கருணாநிதி அவர்களே! உங்களுக்குத் துணி விருந்தால் தமிழகம் முழுதும் செல்ல வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும் எங்கள் தொண்டர்கள் தொடர்ந்து கறுப்புக் கொடிகாட்ட முடிவு செய்திருக்கிறார்கள். நான் அதை ஏற்றுக் கொண் டிருக்கிறேன். இன்று முதல்என் வேலை தொடங்கு கிறது." உடன்பிறப்பே, மேடையில் இப்படிப் புயலாகச் சீறியவர்தான் இன்று தென்றலாக வீசுகிறார். புரிகிறதா உனக்கு? பசுத்தோல் போர்த்த நடமாடுகிறது என்பது புரிகிறதா? அன்று கறுப்புக்கொடி அறிவிப்பைச் செய்யும் போது நடிகருக்கு இந்த மாநாடு நினைவுக்கு வர வில்லையா? தன்னால் நியமனம் செய்யப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்களை அப்போது மறந்துவிட்டாரா? திடீரென்று கேட்டால் அவருக்கே நினைவுக்கு வராத பதினெட்டு செயலாளர்கள் அவரது கட்சியில் இருக் கிறார்களே, அவர்களது ஞாபகம் கூடவா குறைந்த. பட்சம் வராமல் போய்விட்டது! புலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/82&oldid=1695109" இலிருந்து மீள்விக்கப்பட்டது