பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த நாள் செய்தி உன்னோடுதான் இருப்பேன்! உடன்பிறப்பே, வருகிற ஜூன் மூ ன்றாம் நாள் 52-ஆவது வயது தொடங்குகிறது எனக்கு! இந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளில் முப்பத்தேழு ஆண்டுகள் என்னைப் பொது வாழ்க்கையில் ஒப்படைத்துக் கொண்டு உன்னோடு அணிவகுத்துப் பணியாற்றி யிருக்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் அந்த வாய்ப்பு எனக்கு நீடிக்குமோ தெரியாது! இயற்கையோ அல்லது ன்று வளர்ந்துவரும் அரசியல் சூழ்நிலைகளோ அப்படிப்பட்ட ஒரு நிரந்தர ஓய்வை எனக்கு அளிக்கக்கூடும்; அதற்கான காலத்தை நாம் கணிக்கவும் முடியாது; அதைப்பற்றிக் கவலைப்படவும் கூடாது! இருக்கின்ற இடைக்காலத்தில் எதிர்காலச் சமுதாயம் ஏற்றமுள்ளதாக விளங்கிட இன்னும் எப்படித் தொண்டு புரியலாம் - நம்மை வளர்த்த தமிழ் மொழியை, ஆதிக்க அதிகார- சூழ்ச்சி மொழிகள் வளைத்து வீழ்த்திவிடாமல் பாதுகாக்க எப்படி அரண்களை அமைக்கலாம் -- மாநிலங் களின் உரிமைக் குரல் வெற்றி பெற்று- சுயாட்சி முழுமை யானதாக மலர்ந்து - தமிழ்த் தேசிய இனத்தின் வளம் பெருக எவ்வாறெல்றாம் திட்டங்கள் தீட்டிச் செயல் படலாம் - தந்தை பெரியாரின் தன்மான இயக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/84&oldid=1695111" இலிருந்து மீள்விக்கப்பட்டது