பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 75 கொள்கைகள் மேலும் வேரூன்றிப் பரவிடவும், பேரறிஞர் அண்ணாவின் இலட்சிய முழக்கங்கள் வெற்றி முரசங்களாக மாறிடவும் எத்தகைய உழைப்பைத் தொடர்ந்து வழங்கிட லாம் என்பன போன்ற சிந்தனைகள்தான் இருந்திடல் வேண்டும். அந்தச் சிந்தனைகளோடுதான், என்னுடைய ஐம்பத் ரண்டாவது பிறந்த நாளை நெருங்குகிறேன். 1938-ஆம் ஆண்டில் என்னுடைய பதினான்காவது வயதில் திருவாரூர் உயர் நிலைப் பள்ளியில் பயின்றபோதே, இந்தியை எதிர்த்து, புலி-வில்-கயல் பொறித்து, தூய தமிழ்க் கொடியைத் தூக்கிப் பிடித்த கைதான் இந்தக் கை! முத்து அதற்கும் 14 ஆண்டுகட்கு முன்புதான், திருக் குவளையில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் வேலருக்கும் - அஞ்சுகம் அம்மைக்கும் மூன்றாவது பிள்ளை யாக நான் பிறந்தேன்! ம்பத்தோர் ஆண்டுகட்கு முன்பு எங்கேயோ ஒரு சிற்றூரில் பிறந்த என்னையும்-என் அன்பு உடன் பிறப்பாம் உன்னையும் இணைத்துவைத்த அந்தப் பெரும் சக்தி எது? பெரியாரின் கொள்கையும், பேரறிஞர் அண்ணாவின் அரவணைப்பும் அல்லவா? அதற்குள் அரசியலில் ஈடுபடாதே; இன்னும் நன்றாகப் படிந என்று தேன் தமிழில் அறிவுரை கூறி திருவாரூரில் என்னைத் தட்டிக் கொடுத்த அண்ணாவை எண்ணிக் கொள்கிறேன்-கண்கள் குளமாகின்றன! 1945-ஆம் ஆண்டில் புதுவை மாநாட்டில் எதிரிகளால் தாக்குண்டு வீதியில் கிடந்த எனக்கு பெரியார் தன் கைகளாலேயே மருந்து தடவி முதல் சிகிச்சை அளித்து - பிறகு ஈரோடு 'குடியரசு' அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பிள்ளைபோல் வளர்த்தாரே - அதை நினைத்துக் கொள்கிறேன் -- நெஞ்சு கனத்துப் போகிறது! உடன்பிறப்பே! உன்னோடு இணைந்து நின்று நடத்திய அறப் போராட்டங்கள் - அனுபவித்த சிறைவாசங்கள் - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/85&oldid=1695112" இலிருந்து மீள்விக்கப்பட்டது