பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கலைஞர் இதையும்தான் தாங்கிக் கொள்ள வேண்டும்' என்று அதே மனம் எனக்கு ஆறுதலும் கூறுகிறது! பிறந்த நாள் பற்றி எழுத வந்து, எங்கெங்கோ போய் ட்டேன் அல்லவா? விட் என் ஒவ்வொரு பிறந்த நாளும் சமுதாய நலத்திட்டங் களை உள்ளடக்கி அமைவதுபோல் - இந்த ஆண்டு பிறந்த நாளும், திக்கற்ற சிறார் - ஆதரவற்ற கைம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டமாக அமைந்துள்ளதை நீ அறிவாய்! இந்தத் திட்டங்களுக்கு நான் உன்னிடத்தில் நிதிகேட்ப தாக இல்லை; காரணம், நீயும், மற்ற பொதுமக்களும் நிறுவனங்களும் வறட்சி நிதியாக இப்போதுதான் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி அந்தத்தொகை -பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காகச் செலவழிக்கப்பட்டு வருகிறது! நான், 'மே 15ஆம் நாளுடன் போதும் என்று சொல்லியும் கூட வறட்சி நிவாரண நிதியை சிலர் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்! ஆகவே தான், இந்த ஆண்டு என் பிறந்த நாளில் தொடங்குகின்ற சமூக நலத் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசுப் பரிசுச் சீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்து வது' என்று முடிவெடுக்கப்பட்டது. செப்டம்பர் 15 ஆம் நாளுக்குப் பிறகு, பரிசுச் சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் கிடையாது; அதற்குள வறட்சி திக்காக ஒரு பரிசுச் சீட்டும், திக்கற்ற சிறுவர்கள்- விதவைகளுக்கான திட்டத்துக்காக ஒரு பரிசுச் சீட்டும் பயன்படுத்தப்படும். . திக்கற்ற சிறுவர் விடுதிகளுக்கான செலவில் ஒரு பகுதியை அறநிலையத்துறை ஏற்கிறது; மிஞ்சிய செலவு களையும் விதவைகள் நல்வாழ்வுத் திட்டச் செலவுகளையும் - அரசு ஏற்கிறது! எனினும், அதிகாரிகளும் - நிறுவனங்களும் கட்சிச் சார்பற்றவர்களும் இந்தப் புதிய சமூகத் திட்டத்திற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/88&oldid=1695115" இலிருந்து மீள்விக்கப்பட்டது