பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII இளைஞர்களையெல்லாம் தமது உடன் பிறப்புக்களாக அரவணைத்து அவர்கள் எழுச்சிபெற எழுதிய கடிதங்களே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1968 முதல் 1977 வரை மறவன் மடல்' 'நம்நாடு' வார ஏடுகளிலும் 'முரசொலி' நாளேட்டிலும் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. இவைகள் ஏதோ குசலம் விசாரிக்கின்ற கடிதங்களாக இல்லாமல், ஒரு கால கட்டத்தின் கருத்துக் கருவூலங் களாகத் திகழ்வதை நான் மட்டுமல்ல இதனைப் படிக்கும் வாசகர்களும் உணர்வார்கள். அரசியல், - இலக்கியம், பொருளாதாரம், மொழி இன் பிரச்சனைகள் - எதுவானாலும் தமது அருந்தமிழ் வல்லமையால் சுவைபடச் சொல்லும் கலைஞரின் பாங்கு அவருக்கென்றே அமைந்துவிட்ட தனிப் பாணியாகும். இந்த அரிய எழுத்திலக்கியத்தை நூலாக்கி வெளியிடு வதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதனை நூலாக்கி உங்கள் முன் வழங்க இசைந்த கலைஞர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. அன்பன், கா. பனையப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/9&oldid=1695030" இலிருந்து மீள்விக்கப்பட்டது