பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலைஞர் இல்லை; வந்துதான் தீரவேண்டுமென்றால், வெறுங்கை யோடு வராதே - 'மாலைகளோடு வா என்று அழைப்ப தாகக் கருதமாட்டாய் - மாலைக்குப் பதில் கழகத்திற்கான தேர்தல் நிதியுடன் வா! கழகக் கண்மணியே! நீ தரும் தேர்தல் நிதி பத்து ரூபாய் என்றால், அது, எனக்குப் பத்து மாலைகளுக்குச் சமம்! நீ தேர்தல் நிதி வழங்குவதற்காக, என்னருகே பெரிய உண்டியலே இருக்கும். மாவட்டங்களின் அளவில் செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் பத்தாயிரம் ரூபாய் வழங்கி கழகத்தேர்தல் நிதி வசூலைத் தொடங்கி வைத்திருக்கிறார்! மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம், தேர்தல் நிதி திரட்டும் பணியைப் பெரும்பாலும் முடித்துவிட்டார்கள்: நாம் இப்போதுதான் ஆரம்பிக்கிறோம். எனவே. இந்த ஆண்டு பிறந்த நாளுக்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகள் - பொதுச்செயலாளர் நாவலர், பொருளாளர் பேராசிரியர் ஆகியோர் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகள், தேர்தல் நிதி வழங்கும் நிகழ்களாகவே அமைந்திடல் வேண்டும். ஜூன் மூன்றாம் நாள் என் இனிய உடன்பிறப்பே! நீ என் அருகில் இருந்தாலும் - தொலைவில் உன் ஊரில் இருந் தாலும், தமிழகத்தில் இருந்தாலும், கடல் கடந்த நாடு களில் இருந்தாலும உன் கரங்களில் நான் பதிக்கும் அன்பு முத்தங்கள ஏற்றுக்கொள்! உயிர் ஓய்வு கொள்ளும் வரையில் உன்னோடுதான் இருப்பேன். உன்னோடு சேர்ந்துதான் ஊருக்கு உழைப்பேன்! இமைகள், நீங்காத் துயில் கொள்ளும் வரையில், இலட்சியப் பாதையில் என் கால்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்! அன்புள்ள, மு.க. 24 5 - 75 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/90&oldid=1695117" இலிருந்து மீள்விக்கப்பட்டது