பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்கென்ன காரணம்? உடன்பிறப்பே, மன்னையில் ஓர் அர்ச்சகர்; நல்லவர் - முதியவர்; அவரைக் கொலை செய்துவிட்டு, கொடியவர்கள் இருவர் ஆலயத்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென் விட்டார்கள்; உடனடியாக ஒருவன் தப்பி ஓடிவிட்டான். இன்னொருவன், அந்த ஊரிலேயே - அன்றைக்கே பிடி பட்டான்; ஆலயத்துக் காவலர் அவனைத் துரத்திப் பிடித்தார்! இன்னொருவனோ, ஏராளமான நகைகளோடு தலைமறை வாகிவிட்டான்; காவல் துறையினர் கடும் முயற்சி மேற் கொண்டு அவனையும் கைதுசெய்து- அவன் ஒளித்து வைத் திருந்த நகைகளையும் மீட்டுவிட்டனர்! கொலை செய்யப்பட்ட அர்ச்சகர் குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் அறநிலையத் துறையின் சார்பாக வழங்கப்படுகிறது; கொடியவர்களைப் பிடித்தவர்களுக்குப் பரிசுத் தொகை அளிக்கப்படுகிறது! வீட்டுத் தலைவரை இழந்துவிட்ட அர்ச்சகர் குடும்பத் துக்கு ஆறுதல் கூறிட நமது அமைச்சர் மன்னை நாராயண சாமி அவர்களே நேரில் சென்றார்! அந்தக் குடும்பத்தின் கண்ணீரை அவ்வளவு எளிதாகத் துடைத்துவிட இயலாது எனினும், நாம், நமது கடமைகள் அனைத்தையும் மனிதாபிமான அடிப்படையில் செய் துள்ளோம்! உழைக்காமல் திடீர்ப் பணக்காரனாக வேண்டுமென்று துடிப்பவன் மேற்கொள்கின்ற கொடிய வழிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/91&oldid=1695118" இலிருந்து மீள்விக்கப்பட்டது