பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞர் செய்வதும் இடம் பெறு கொள்ளையடிப்பதும் - கொலை கின்றன: அந்தக் குற்றவாளிகள், ஒன்றிரண்டு நிகழ்ச்சி களில் தப்பிவிடுகிறார்கள்; என்றாலும் - பெரும்பாலும், காவல் துறையினரின் தீவிர முயற்சிகளால் பிடிபட்டு விடுகிறார்கள்! மன்னைக் கோயிலில் நுழைந்த அந்த வெறியர்களும் அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள்; 'காவல் துறை, தன் கடமையை மிகத் திறமையாகச் செய்துள்ளது' என நாடே பாரட்டுகிறது! திலும் தி.மு.கழக ஆட்சியைக் குறை சொல்ல வேண்டுமென்று வழக்கமான எரிச்சல் கடைகள் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கிவிட்டன! "கழக ஆட்சியில் இப்படிப்பட்ட காரியங்களுக் குத் துணிச்சல் ஏற்பட்டுவிட்டது! ""அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியே' என்பதுபோல் கழக ஆட்சி நடப்பதால், கோயிலில் புகுந்து கொலை செய்கிறார்கள்- கொள்ளையடிக் கிறார்கள்! "காங்கிரஸ் ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம், நடைபெறுமா? எங்கேயாவது கிறதா? 66 நடைபெற்றிருக் "நாத்திகம் பெருத்து விட்டது; நாசவேலைகள் நடக்கின்றன! - கொண் இதுபோலப் பேசியும் - எழுதியும் தங்கள் ஆத்திரத்தை தி.மு.க. ஆட்சியின்மீது கொட்டித் தீர்த்துக் டிருக்கிறார்கள்! மன்னை ஆலயத்தில் ஆலயத்தில் நடந்த சம்பவத்தை, யாரும் விளையாட்டுக்குக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! க கடவுளே இல்லை' என்று கூறுகின்ற நாத்திக வாதத்திலேகூட, இந்த நாச வேலைகளுக்கு வக்காலத்து வாங்கும் கொள்கை கிடையாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/92&oldid=1695119" இலிருந்து மீள்விக்கப்பட்டது