பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைஞர் அரசு எவ்வழியோ குடிகள் அவ்வழி" என்று இன்று சிலர் நம்மைக் குறைகூறுகிறார்களே - திருவையாற்றுக் கோயில் கொள்ளை அப்போதிருந்த அரசு வழியில் நடை பற்றதுதானா? சிவபுரம் நடராசப் பெருமானையே அமெரிக்காவுக்குக் கடத்தியவர்கள் யார்? எந்தக் குடும்பத்தினர்? எந்த ஆட்சியில்? குடும்பமும், காங்கிரசு - ஆட்சியும் காங்கிரசு அல்லவா? அப்போது எங்கே போயின -இந்த எரிச்சல் தாணிகள்? எழுத் மன்னார்குடி சம்பவத்தைக் கழகக் கொள்கைகளோடு இணைத்து,நமது ஆட்சிக்கு மாசுகள் கற்பிக்க மலைமலையாக எழுதிக் குவிக்கிறார்களே - அவர்களுக்கு இதோ ஒரு செய்தி! நீ படித்துப் பார்! நாட்டுக்கும் சொல்லு! “இந்த ஆண்டு மே திங்கள் மூன்றாம் வாரத்தில் ஜெய்ப்பூர் நகருக்கு அருகில் உள்ள கால்டா ஆலயத் தில் இருந்த 250 ஆண்டுக் காலத் தொன்மை வாய்ந்ததும், பல உலோகங்களால் செய்யப்பட்டது மான சூரிய பகவான் விக்கிரகம் ஒன்று திருடிச் செல்லப்பட்டுவிட்டது. 'ஆலயத்தின் அர்ச்சகர் ஒருவரின் கழுத்து நெறிக்கப்பட்டு-கொலை செய்யப்பட்டு-சடலத்தை யும் குளத்தில் போட்டுவிட்டு திருடர்கள் ஓடி விட்டார்கள்! "இரவு பூஜைக்கு மற்றோர் அர்ச்சகர் வந்த போதுதான், விக்கிரகம் காணாமற்போன விபரமே தெரிந்தது! இப்படிச் செய்தி, தமிழ் - ஆங்கில நாளேடுகள் அனைத் திலும், மே 29-ந்தேதியன்று வெளியாகியிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/94&oldid=1695121" இலிருந்து மீள்விக்கப்பட்டது