பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணினேன் - இயலவில்லை; எழுதினேன் ! உடன்பிறப்பே, - G என் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்க்க இதய வாழ்த்துக்களைப் பொழிந்து கழகத் தேர்தல் நிதிக்காக இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட வெண் பொற்கா சுகளையும் வாரி வழங்கி பிறந்த நாளில் உன் திருமுகத் தையும் காட்டி ஊருக்குத் திரும்பி விட்டாய்! C 1 நீ நலம் விசாரிக்க நேரமில்லை: உட்கார்" என்று உபசரிக்க இடமில்லை; வரிசை வரிசையாக நீ வீதியிலே அணிவகுத்து நின்று மெல்ல மெல்ல நகர்ந்து என்னருகே வந்து வாழ்த்துக் கூறியிருக்கிறாய் என்பதைக்கூட, மறுநாள் நாளேடுகளில் வந்த புகைப்படங்களில் கண்டுதான் புரிந்து கொள்ள முடிந்தது! உன் தோளில் தொத்தி வந்த கிள்ளை மொழிப் பிள்ளைச் சல்வங்கள். பிஞ்சுக் கரங்கள் குவித்து வணக்கம் தெரிவித்தபோது, நெஞ்சம் எப்படி இன்பப் பேரருவியாக மாறிற்று தெரியுமா? உன் கரமும்-என் கரமும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டது, மின்வெட்டு நேரம்தான் இருக்கும்? அந்த உணர்ச்சிப் பெருக்கை வெளியிட வார்த்தைகளைத் தேடு கிறேன்- கிடைக்கவில்லை! அந்த நொடிப்பொழுதிலும் நம் இதயங்கள் வாய் திறந்து எவ்வளவு எவ்வளவு செய்திகளைப் பேசிக் கொண்டன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/96&oldid=1695123" இலிருந்து மீள்விக்கப்பட்டது