பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கலைஞர் பிள்ளைப் பருவத்தில் உன்னோடு சேர்ந்து கொடி பிடித் தேன்; 'கோஷம் போட்டேன்; கூட்டம் நடத்தினேன்: மேடை போட்டேன்; விளம்பரங்களை ஒட்டினேன்; தோரணங்களைக் கட்டினேன்; தொண்டனாக இருந்தேன்' இன்று நீ என்னை, 'தலைவன்' என்கிறாய். இல்லை. இல்லை ; நான் தலைவன் இல்லை; நாம் வளர்த்த இயக்கத்தை நடத்திச் செல்லும் நிர்வாகப் பொறுப்புக்கு நீ வைத்துள்ள அடையாளக் குறிகள்தான். தலைவர் - பாதுச் செயலாளர் - பொருளாளர் என்பதெல்லாம்! பெரியாருக்கு மாணவர்களாய் விளங்கிய பருவத்தி லிருந்தே பழகுகிறவர்கள்தான் - பாசம் கொண்டு திகழ்ந்த வர்கள்தான் - இன்றைக்கு இந்தப் பேரியக்கத்தை நடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கிறோம்! அகலாது O பேரறிஞர் அண்ணாவின் தம்பிகளாய் - அவரைவிட்டு அவர் இட்ட பணிகளை நிறைவேற்றியும், அவரோடு அமர்ந்து இயக்க வளர்ச்சியைச் சிந்தித்தும் இரண்டறக் கலந்து இருந்தவர்கள்தான் கழகத்தின் பொறுப்பாளர்களாகிய நாங்கள்! ன்றையக் வேண்டுகோள்தான் விடுக்கிறோம், நாங்கள்; அதனை நீ கட்டளையாக ஏற்றுக் கொள்கிறாய்! ஏன்? என்ன காரணம்? எங்கள் வேண்டுகோள் எங்களுக்காக அல்ல; தமிழ்ச் சமுதாயத்தின் பெருமையைக் காப்பாற்ற! தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப் பட்டுமிருக்கின்ற அடித்தளத்து மக்கள் - நடுத்தர வர்க்கத்தினர் புறக் கணிக்கப்பட்டோர் - ஆகியோரது வாழ்வில் விளக்கேற்றி வைக்க! இந்த உண்மையை நீ உணர்ந்து கொண்டிருப்ப தாலேயே, அன்பு வேண்டுகோளை ஆணையாக கொண்டு செயல்படுகிறாய்; எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/98&oldid=1695125" இலிருந்து மீள்விக்கப்பட்டது