பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கலைஞர்" அன்பின் சிகரம், அடக்கத்தின் வடிவம், அநியாயம் கண்ட இடத்து ஆர்த்தெழும் களிறு! அவர் இழப்பு என் நெஞ்சில் உதிரம் கசியுமாறு செய்து விட்டது. தொகுதியில் எந்த நிகழ்ச்சியாயினும் அங்கே நமது கண்ணன் இருப்பார். கழகக் கூட்டமா? மேடை அமைப் பவர்களில் அவரும் ஒருவராக இருப்பார்! கழகம் இடும் கட்டளைகளை நிறைவேற்ற, கழகத்திற்காக எந்தத் தொல்லைகளையும் ஏற்றுக்கொள்ள, இதோ ஒரு உடன் பிறப்பு இருக்கிறது - இணைபிரியாத உடன்பிறப்பு எனப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோமே! அதுகண்டு சாவின் பொறாமைக் கண்களுக்குச் சகித்துக்கொள்ளும் சக்தியில்லை. அந்த உடன்பிறப்பைத் தூக்கித் தன் வாயிலே போட்டுக் கொண்டுவிட்டது! ஏ சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் எடுத்துவைத்த கருத்துக்களுக்குக் கண்ணன் பதில் கூறிக் கொண்டிருப்பார். விவாதத்தில் சூடு ஏறும். பேச்சு, கர்ச்சனையாக மாறும்! அமளியிற்போய் முடியுமோ என்ற ற அச்சம் பிறக்கும் நேரத்தில் நான் அவரைத் திரும்பிப் பார்ப்பேன். ஆம்! எனக்குப் பின்னால்தான் வரது இருக்கை இருந்தது! திரும்பிப் பார்த்தவுடன் திடீரெனப் பேச்சை நிறுத்துவார். புயல், தென்றலாக மாறும். விரைவில் பேச்சு முடிவுறும்! இது நான் பேரவையில் கண்டது. அய்யோ! கண்ணா! தலைமைக்குப் பயந்து விரைவில் உன் பேச்சுத்தானே முடிந்தது; இப்போது யாருக்குப் பயந்து இவ்வளவு விரைவில் உன் மூச்சும் முடிந்து: போயிற்று? பெரியாரின் தொண்டனே! பேரறிஞர் அண்ணாவின் தம்பியே! என் இனிய உடன்பிறப்பே! அந்தப் பகுதிக்கே நீயிருக்கிறாய்; தி. மு. கழகத்தின் தேக்குமரத் தூணாக என்றல்லவா நாங்கள் நிம்மதியாக இருந்தோம்!