பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று விடு தூது! உடன்பிறப்பே, "காற்றே காற்றே நில்லாயோ கனிவாய் என்சொல் கேளாயோ சாற்றேன் அதிகம் சற்றேதான் தயவாய்த் தூது செல்வாயே! ஆயிரம் விளக்கு ஊர் ஒன்று அருகே கோபால புரம் சென்று தாயெழில் கலைஞர் வீடுண்டு தனியெ அவரை நீ அவரை நீ கண்டு. எங்கள் அன்பினை மென் காற்றே தயக் குரலென சொல் காற்றே இங்கே யாவரும் நலம் காற்றே அங்கே அவர் நலம் கேள் காற்றே! “என்ன, உன்னைப்பற்றி நீயே ஒரு கவிதை எழுதிக் கொண்டயா? என்று கேட்டத் தோன்றுகிறதல்லவா உனக்கு? இது நான் எழுதியதல்ல. மிகத் தொலைவில் இருக்கிற ஓர் உடன்பிறப்பு, ஆம், உன்னைப்போன்ற அன்பின் வடிவம், கழகக் கண்மணி எனக்கு அஞ்சல் மூலம் விடுத்த, காற்று விடு தூதாகும்! அந்தத் தூதுப்பாடலில் இன்னும் பல செய்திகள் அடங்கியிருந்தன. கடிதத்தின் அளவு கருதி அவைகளையெல்லாம் நானே குறைத்து விட்டேன். கிள்ளைகளைத் தூதனுப்பிக் காதல் தொல்லையிலே சிக்குண்டோர். ஆறுதல் பெறுவதுண்டு, காவியங்களில்! படித்திருக்கிறோம்! நடைபயிலும் அன்னம், நளனுக்கும் 5-7A-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/15&oldid=1695238" இலிருந்து மீள்விக்கப்பட்டது