பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகள் பற்றிப் பிரதமர்! உடன்பிறப்பே, 6 புதுடெல்லியில் "நேஷனல் ஹெரால்டு" இதழின் ஆசிரியரைப் பாராட்டுகிற ஒரு விழாவில் பத்திரிகை களைப் பற்றிய சில கருத்துக்களை பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் பத்திரிகைகளைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களைப் பின் வருமாறு தொகுத்திடலாம். . ஃ பல பத்திரிகைகள், பொறுப்புணர்ச்சிகளை அடி யோடு தூக்கி எறிந்துவிட்டன. ஃ விஷய விளக்கங்கள் அளிப்பதற்குப் பதிலாக உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் நடந்துகொண்டன. ஃ நிறையப் பணம் எப்படியாவது சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இன்றைய பத்திரிகை. களிடையே வளர்ந்திருப்பது தவறானதாகும். ஃ பத்திரிகைத் துறையில் உள்ள ஆண்களும். பெண்களும் பத்திரிகைகளில் வரும் கீழ்த்தரமான செய்திகளைத் தடுக்கவேண்டும். ஃ பத்திரிகைகளில் வெளியாகும் ஆபாசமான பொய்ச் செய்திகளைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். .