பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 7 வெகு தொலைவில் இருப்பதால் சென்னை மாநகரில் ஆயிரம் விளக்கு என்பது ஒரு பகுதியா? அல்லது ஊரா? என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார். பார்த் தாயா? ஒருவேளை அவர், பட்டினம் வந்து பார்த்தவரோ இல்லையோ? 1924-ஆம் ஆண்டு திருக்குவளை கிராமத்தில் பிறந்த நானே. 1936-ஆம் ஆண்டுதான் பக்கத்தில் பதினைந் தாவது மைலில் உள்ள திருவாரூர் நகரத்துக்கே செல்லு கின்ற வாய்ப்புப் பெற்றேன். அந்தப் பயணமே, அப்போது எங்கள் வீட்டில் ஏதோ வெளி நாட்டுக்குப் புறப்படுகிற ஏற்பாடுகளைப்போல அவ்வளவு பரபரப்பாக அமைந்தது! சென்னை வந்தாரோ இல்லையோ, என்னையும் உன்னை யும்-நாம் ஏற்றிருக்கிற கொள்கைகளையும், அந்தக் கொள்கைக் கூடாரமாம் நமது கழகத்தையும், அவர் தன்னுடைய இதய வீட்டில் வைத்திருக்கிறார் என்பதை மட்டும் இந்தக் காற்றுவிடு தூது சுட்டிக் காட்டுகிறது! தூதில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக் காணும் போது, அவர் துடிதுடிப்புத் தெரிகிறது! என்னை வந்து எப்படியும் காணவேண்டும் என்ற ஆவல் புரிகிறது! அவ்வளவு தொலைவு சென்று காணவேண்டுமே, நம்மால் இயலாதே! என்ற ஏக்கமும் அந்தப் பாட்டில் தொனிக்கிறது. ஏன், அவர்தான் வந்து நம்மையெல்லாம் பார்க்கக் கூடாதா? என்ற செல்லமான கோபமும் தென் படுகிறது! "நீ, சுற்றுப் பயணம் வரவில்லையா? இதோ பார் - நான் தூதனுப்புகிறேன் காற்றை!” என்று கவிதை யிலேயே தன் தாபத்தைத் தணித்துக் கொள்கிறார். 6 எனக்கும் ஆசைதான், எல்லா ஊர்களுக்கும் ஒரு முறை சென்று வரவேண்டுமென்று! எவ்வளவு வேலைத் தொல்லைகள் எனக்கு ஓய்வில்லாமல் இருக்கின்றன என்று தெரியாதா என்ன? உடன்பிறப்பே உனக்குத் C

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/17&oldid=1695240" இலிருந்து மீள்விக்கப்பட்டது