பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞர் அதனை உணர்ந்திடும் பக்குவம் பெற்ற உடன்பிறப்பாக நீ இருப்பதால் தானே, ஓடோடி வருகிறாய் தினமும் என்னைக் காண! நீ அள்ளிக் குவிக்கும், விசாரணைக் கமிஷன் செலவுக் கான நிதி, ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது என்று தலைமைக் கழக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்தது ஞாயிற்றுக்கிழமை காலையில்! மாலையில் நிலைமை என்ன தெரியுமா? ஐம்பதைத் தாண்டிய நிதி, அறுபதைத் தொடுவதற்குக் கையை நீட்டு கிறது! ஆம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஏழாயிரத்து முன்னூற்றி இருபத்தெட்டு ரூபாய். இல்லம் நோக்கியும், அன்பகம் நோக்கியும் அணி அணியாக வந்த நமது உடன் பிறப்புக்கள் வழங்கியிருக்கின்றனர். கொ காலையில் முதல் நாள் சனிக்கிழமை இரவு நீண்டநேரம் படித்துக் காண்டிருந்தேன் சரியாகக்கூடத் தூக்கமில்லை. ஞாயிறு எழுந்ததும்...எனக்கே ஒரே திகைப்பு! வீதிப் பக்கம் பார்த்தேன்-இன்று என்ன ஜூன் மூன்றாம் நாளா? என்ற திகைப்பு எனக்கு ஏற்பட்டது! புதுவையிலிருந்து பேருந்து-நெல்லிக் குப்பத்திலிருந்து பேருந்து-தாராபுரத் திலிருந்து பேருந்து...அவைகளில் நமது உடன்பிறப்புக்கள் தங்கள் தாய் தந்தையருடன்! தங்கம் நிகர் மழலைகளை இடுப்பிலேந்தியிருக்கும் தங்கள் இல்லக்கிழத்தியருடன்! அதுமட்டுமா, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னைப் பகுதிகளில் இருந்தும்... முதியோர், இளைஞர், மாணவர். தொழிலாளர், மகளிர்-என ஆயிரமாயிர மாய்க் கூடினர்! எத்தனையோ சாட்டையடிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் என் இதயத்துக்கு மருந்து போட்டனர்! இல்லை ! இல்லை! அவர்களே மருந்தாயினர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/18&oldid=1695242" இலிருந்து மீள்விக்கப்பட்டது