பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் நிதி 9 கழகத்தினர் மட்டுமல்ல, கழகத்தின்பால் அன்பு கொண்ட பிறரும் பெருமளவுக்கு வருகின்றனர். தருகின்றனர். இந்த எழுச்சிக்கு என்ன காரணம்? அண்ணா, கூறியுள்ள வாசகம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது! அவர் சொன்னதை சிந்தித்தால், இந்த ஆர்வத்துக்கான காரணத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்! இதோ, அண்ணா பேசுகிறார், கேள்! "தம்பி!, விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு எவரும் பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, 'என்ன? என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல்பாய்ந்த வேதனையோ? வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்ட தால் வந்துற்ற வலியோ? காரணம் யாதோ? கரி இதுபோல் குரல் எழுப்ப, என்று எவரும் எண்ணுவர், ஆம்மல்லவா? பட்டுத்துணி காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச் செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர், பறந்திடும் பட்டம் அறுபட்டால் பதறுவரோ? அஃதே போன்றுதான் தம்பீ! நமது கழகம், மதிப்பு மிக்கது, பயன் தரவல்லது. நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின் ஆதரவு பெற்றது. பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும் பொறுப்பினை மேற்கொண்டிருப்பது என்பதனால் தான், அத்தகைய ஓர் அமைப்புக்கு, ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும் நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று, அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது காரியத்தைப் பார்ப்போம் என்று பொதுமக்கள். இருந்து விடவில்லை. கழகம் கட்டுக்கோப்பு குலையாமல், வலிவும்பொலிவும் பெற்று வளரவேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/19&oldid=1695241" இலிருந்து மீள்விக்கப்பட்டது