பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த ஆண்டு பிறந்த நாளில்...! உடன்பிறப்பே, எனக்குப் பிறந்த நாள் கொண்டாட விரும்புகிற மாணவ உடன்பிறப்புக்கள் சிலர், என்ன காரணத் தாலோ என் வயதை ஓராண்டு அதிகமாக உயர்த்தி விட்டனர். பத்திரிகை பில் அவர்கள் விடுத்துள்ள ஒரு செய்தியில் பார்த்தேன். கருணாநிதிக்கு 54-வது பிறந்த நாள் விழா என்று! திடுக்கிட்டேன்! கலையுலகில் சிலருக்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சியல்ல அது! எப்படியாவது வயதைக் குறைத்துக் காட்ட வேண்டுமென்ற துடிப்பும் கிடையாது எனக்கு! தலையில் கால் ரூபாய் நாணயம் அளவுக்கு எனக்கு 'வழுக்கை தோன்ற ஆரம்பித்தபோதே அதைப் பார்த்துவிட்டு அண்ணா அவர்கள், •“கருணாநிதி! இதற்குத் தொத்தா ஒரு நல்ல மருந்து சொல்வார்கள். கற்றாழையை விளக்கில் வதக்கி, அதில் படியும் புகையை எடுத்து எண் ணெயில் குழைத்து நாள்தோறும் தடவிக்கொள்” என்று பரிவோடு கூறினார்! என்னிடம் சொன்னது மட்டுமல்ல, காஞ்சீபுரத்தில் வீட்டில் தொத்தாவிடமும் (அண்ணாவின் சிறிய தாயார்) சொல்லிவிட்டார் போலும். தொத்தா என்னைவிடவில்லை. நான் போகும்போதெல்லாம் கால் ரூபாய் அளவுக்கு இருந்த வழக்கையைத் தொட்டுத் தொட்டுக் காட்டி மருந்துப் பக்குவம் சொல்லிக்கொண்டே யிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/21&oldid=1695245" இலிருந்து மீள்விக்கப்பட்டது