பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கலைஞர் "சும்மாயிருங்க தொத்தா! வழுக்கை விழுந் தால் நல்லதுதான். எனக்கு நாற்பது வயது ஆனால்கூட அண்ணா என்னை இளைஞன் என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்காகவாவது எனக்கு வழுக்கை விழட்டும். அரசியலில் வயது ஏற ஏறத்தான் மதிப்பு அதிகம். 99 என்று பதில் கூறினேன். "நீ போக்கிரியாச்சே" இது தொத்தாவின் அன்பான கண்டிப்பு! அதற்கேற்ப அண்ணாவின் மந்தகாசப் புன்னகை! வெள்ளிப் பணம் அளவுக்கு இருந்த வழுக்கை இன்று வெண்ணிலா அளவுக்கு விரிவடைந்து என் ஆவலை நிறைவு செய்திருக்கிறது. ஒரு முறை நண்பர் தமிழ்வாணன், என் தலையைப் பார்த்துவிட்டு • • 6T GOT GOT? வழுக்கை இவ்வளவு சிரித்துக் கொண்டே! ஆமாம்! இதுதான் இளமைக்கு அடையாளம் என்றேன் விழுந்து விட்டதே!" யாக! என்றார். “எப்படி” என்றார் வியப்புடன்! 'தேங்காயில் வழுக்கை இருந்தால்தானே நல்ல இளநீர் என்கிறோம்! அது பால இந்த வழுக்கை இளமை யைக் குறிக்கிறது. றிக்கிறது" என்றேன்! இப்படி வயது ஏறுவதையும் அதற்கான அடையா யங்கள் தோன்றுவதையும் நான் மகிழ்ச்சியு - ன் ஏற்றுக் கொண்டவனே தவிர, அதற்காக வருந்திக் கொண்டிருப் பவனல்ல! வருந்துவதாகவே வைத்துக்கொள்வோம், அதன் பொருட்டு, வயது ஏறுவதற்குப் பதில் குறையத் தொடங்கி மீண்டும் இளமைத் துடிப்பு வந்துவிடப்போகிறதா? இளமை என்பது வயதிலா இருக்கிறது? பதினெட்டு வயது பருவக்காளை! எடுப்பான இளமீசை! தேக்குமரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/22&oldid=1695246" இலிருந்து மீள்விக்கப்பட்டது