பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 13 கடைந்ததுபோல் தேகக் கட்டு! இவ்வளவு இருந்தும், கொள்கை உறுதியில் இலட்சியப் பிடிப்பில் ஈளை கட்டி; இருமல் மிகுந்த கிழவனின் உடல் நடுங்குவது போலல்லவா நடுங்குகிற தன்மையை சிலரிடம் காணுகிறோம்! அதேபோழ்து, தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்த பெரியார். ‘“வயதில் அறிவில் முதியார்-நாட்டின் வாய்மைப் போருக்கு என்றும் இளையார்." என்ற புகழ் வரிகளால் அல்லவா புரட்சிக் கவிஞரால் பாராட்டப்பெற்றார்! அதே வயது வரையில் வாழ்ந்த மூதறிஞர் ராஜாஜியின் உறுதியும், துணிவும், கொள்கைப் பிடிப்பும்-அவரை எவ்வளவு இளைஞராகத் தோன்றச் செய்தது! அத்தனை காலம் வாழமுடியாமற் போனாலும், அண்ணா வாகட்டும், காமராஜராகட்டும் வாலிப வயதினரல்லவே! எனினும் வாலிபர்களிடமும் காணக் கிடைக்காத வைராக்ய உள்ளமன்றோ அவர்களுக்குக் கொள்கைகளின்பால் இருந்தது! தளரா ஊக்கம் - தயங்காப்பணி - நெஞ்சில் உறுதி- இவைகளின் மொத்தவடிவமாகத் திகழ்ந்த காந்தியடிகள், இறுதிமூச்சு விடும் வரையில் இலட்சிய தீபமாகத்தானே ஒளி வீசினார் ! இளம் வயது கொடுத்த ஊக்கமா அது? அல்ல! அல்ல! எத்தனை வயதானாலும் நரை. திரை, மூப்பு வந்தாலும் மாறாத ளமை உணர்வுடன் கூடிய இலட்சிய உறுதி வழங்கிய அருட்கொடை அது! உடன்பிறப்பே எங்கேயோ தொடங்கி உன்னை எங்கேயோ இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் அல்லவா? எனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்தும்போது மிகப் பெரியவர்களின் மாண்பினை நினைவு கூர்ந்தது; என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/23&oldid=1695247" இலிருந்து மீள்விக்கப்பட்டது