பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கலைஞர் அவர்களோடு வைத்து மதித்திடவேண்டுமென்ப பதற்காக, அல்ல என்பதை நான் குறிப்பிடாமலே நீ புரிந்து கொள் வாய்! அவர்களின் அறிவு, ஆற்றல், தொண்டு, அனுபவம் தியாகம், ஆகியவற்றின் முன்னே நான் மலைக்கு அடுத்து உள்ள மடுவைப் போன்றவன். க அவர்களிடம் கற்க வேண்டியவை ஏராளமிருக்கின்றன. அவர்கள் வாழ்ந்து காட்டிய தியாகவாழ்வு, தீர வாழ்வு நமக்கெல்லாம் இருண்ட பாதையைக் கடப்பதற்கேற்ற கைவிளக்காகத் திகழ்கின்றன. அந்த விளக்கினைக் கையில் ஏந்திக்கொண்டு தான் மழையிலும் பெருங்காற்றிலும் மலைமுகடுகள், காட் டாறுகள் நிரம்பிய இருண்டபாதையைக் கடந்து கொண் டிருக்கிறோம். அந்தப் பயணிகளில் ஒருவன்தான் நான்! ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம நிலையைப் பொருளாதார மாற்றத்தின் மூலமும், சாதிபேதமற்ற ஒன்றே குலமெனும் சமத்துவத் தைச் சமுதாயப் பணிகளின் மூலமும், மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை அரசியல் பணிகளின் மூலமும் நிலைநாட்டிட இன்றைக்கு நாட்டிலுள்ள நல்லோர் பலரும் பலமுனைகளில் தொண்டாற்றுகின்றனர். அதில் நாம் தேர்ந்தெடுத்துள்ள முனைதான்; அறிஞர் அண்ணா வகுத்துத் தந்த வழியாகும்! அந்த வழி நடைப் பயணிகளில் ஒருவன் நான்! சாமா னியன்! உன் இருதயத்தில் எனக்குக் கிடைத்த இடத்தின் காரணமாக உன்னை வழி நடத்திச் செல்லும் தலைமை அணியில் இருப்பவன்! அதனால் என் பிறந்த நாளில் ஆண்டு தோறும் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறாய்! உண்மை என்ன தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/24&oldid=1695248" இலிருந்து மீள்விக்கப்பட்டது