பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 15 யுமா? என்னைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குகிறாய்! நானும் என் மாகிறேன்! துன்பங்களை மறந்து உன்னோடு சங்கம நேற்று மாலை மாயவரம் இருந்து ஒரு செய்தி! மாறனின் மைத்துனர் துணைவி! சிட்டுப் போல, முல்லை மொட்டுப்போல மழலைகளைப் பரிதவிக்க விட்டுவிட்டு. கொஞ்ச வயதில் திடீரென இறந்துவிட்டதாகச் செய்தி! இங்கு விபத்தொன்றுக்காளாகி வீட்டில் சோக வெள்ளம்! அழுது புலம்பியவாறு என் வீட்டார் பயணப் படுகிறார்கள். அப்போது பேருந்து வாயிலாக. கழக உடன்பிறப்புக்கள் சின்னசேலத்திலிருந்து விசாரணைக் கமிஷன் நிதி வழங்க வந்து கூடிவிடார்கள்! புதன்கிழமை தான்! ஓய்வு கேட்டிருந்தேன். கிடைக்கவில்லை! வீட்டுக் குள்ளே சோகப் பெருக்கு! வெளியில் இருக்கும் கழகத் தினரை வேதனைப்படுத்துவானேன் என்று அதை அதை அவர் களிடம் காட்டிக்கொள்ளாமலே அளவளாவினேன். நிலவரம் விசாரித்தேன். வீதி வீதி வரையில் வந்து அவர் களுடன் பேருந்துக்கு முன்பு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன் இதுதானே, பொது வாழ்வு! . கட்சி இந்தப் பொது வாழ்வு இலக்கணத்தை நான் முதலில் குறிப்பிட்டேனே; அந்தப் பெரியவர்களிடம் ஒரு சிறிதாவது கற்றிருக்கிறேன்! முழுவதுமல்ல! பொதுவாழ்வுப் பணிக்கு நீ வழங்கும் வாழ்த்துக்கள் நாள்தோறும் கிடைக்கின்றன என்றாலும், என்றாலும், பிறந்த நாளில் அதற்கு எப்படியோ ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி விட்டோமல்லவா? இந்த ஆண்டு, பிச்சைக்காரர் மறுவாழ்வு போல - கண்ணொளி வழங்குதல் போல -கைரிக்ஷா அகற்றிசைக்கிள் ரிக்ஷா வழங்கியதுபோல -ஊனமுற்றோர் நல்வாழ்வு போல - கைம்பெண்கள் நல்லாதரவு போல - கருணை இல்லம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/25&oldid=1695249" இலிருந்து மீள்விக்கப்பட்டது