பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞர் போல - ஏதாவது திட்டமுண்டா? என்று நாள் தோறும் மடல் தீட்டுகிறாய்! தொடங்கப்பட்ட அந்தத் திட்டங்களை, அரசாங்கம் தொடர்ந்து நடத்துகிறது! மேலும் நடத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு! இந்த ஆண்டு. 10 உனது கடமை, விசாரணைக் கமிஷன் செலவுநிதி வழங்குவதுதான். அதனை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறாய்! பிறந்த நாளிலும் சரி, அதன் பிறகும் சரி, அந்தப் பணிதான் தொடர்ந்திட வேண்டும். கடித ஆரம்பத்தில் எழுப்பிய சந்தேகத்தைத் தீர்க் காமலே விட்டுவிட்டேனே! நான் பிறந்தது 1924 ஜூன் 3-ஆம் நாள்152-வயது முடிந்து, 53-வது வயது தொடங்கு கிறது! மாணவர்கள் ஒரு வயதைத்தான் அதிகமாகக் கூட்டி னார்கள். அதனால் அவர்களை மன்னித்து விடலாம்! அவர்கள் செய்த இந்த குற்றத்துக்குப் பரிகாரமாக, இரட்டிப்பு நிதி வழங்கிடவேண்டும். அதுதான் தண்டனை. அன்புள்ள. மு.க. 20-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/26&oldid=1695250" இலிருந்து மீள்விக்கப்பட்டது